டிவி நடிகையை வெறித்துப் பார்த்து வம்பிழுத்த ஆட்டோ டிரைவர் கைது
மும்பை: மும்பையில் டிவி நடிகை மோநஸ் மேவாலாவிடம் வம்பிழுதது ஆபாசமாகப் பேசி ரகளை செய்த ஆட்டோ டிரைவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பான வீடியோ ஆதாரம் பெறப் பெற்ற மும்பை போலீஸார் அந்த நபரை ஒரு நாள் தேடலுக்குப் பின்னர் கண்டுபிடித்துக் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக நடிகையும் புகார் கூறியிருந்தார்.

மும்பை கோரேகான் பகுதியில் உள்ள எஸ்.வி.சாலையில் திங்கள்கிழமை மதியம் 1.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது.
நடிகை படப்பிடிப்புக்காக போய்க் கொண்டிருந்தார். அப்போது ஹைதர் அலி அப்பாஸ் அலி மொபீன் என்ற அந்த ஆட்டோ டிரைவர், நடிகையை வழிமறித்து வம்பு செய்து ஆபாசமாகப் பேசியுள்ளார்.
இதனால் வெகுண்ட நடிகை போலீஸில் புகார் கொடுத்தார். மேலும் தனது பேஸ்புக் பக்கத்திலும் இந்த விவகாரம் குறித்து வீடியோவுடன் போஸ்ட்டும் போட்டார்.
இதுகுரித்து அவர் கூறுகையில், எனது வாகனம் ஒரு சிக்னலில் நின்றிருந்தபோது எனக்கு முன்னாள் இந்த ஆட்டோ நின்றிருந்தது. அப்போது அந்த ஆட்டோ டிரைவர் என்னையே வெறித்துப் பார்த்தார். சிக்னல் விழுந்தும் கூட நகராமல் வெறித்தவண்ணம் இருந்தார். இதனால் எனது வாகனத்தை எடுக்க முடியவில்லை.
இதையடுத்து நாான் எனது காரை ஓவர்டேக் செய்து கிளம்பியபோது வேண்டும் என்றே என்னிடம் வம்புக்கு வந்தார். தனது ஆட்டோவால் எனது காரின் பக்கவாட்டில் உரசினார். ஆபாசமாகவும் பேசினார்.
பின்னர் ஆட்டோவை நிறுத்தி விட்டு கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து எனது காரை அடிக்கப் பாய்ந்தார். உன்னை அடிக்காமல் விட மாட்டேன் என்றும் என்னைப் பார்த்து கோபமாக கத்தினார். நான் வேகமாக காரை எடுத்துக் கொண்டு வந்ததால் தப்பினேன் என்று கூறியிருந்தார்.
இந்த சம்பவத்தை தனது செல்போன் கேமராவில் பதிவு செய்து கொண்டாராம் நடிகை. அதைத்தான் போலீஸிலும் கொடுத்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications