இந்தி டிவி நடிகையை பலாத்காரம் செய்து, ரூ.26 லட்சத்தை சுருட்டிய சாமியார்
மும்பை: மும்பையில் பிரபல இந்தி தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் 27 வயது நடிகையை சாமியார் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பிரபல இந்தி தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் 27 வயது நடிகைக்கு மகாரஷ்டிரா வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு ஆணைய லாட்டரியில் வீடு ஒன்றை வெல்ல ஆசை. அந்த ஆணையம் வீடுகள் கட்டி குலுக்கல் முறையில் நபர்களை தேர்வு செய்து வீடுகள் வழங்கி வருகிறது. அவர் இந்த குலுக்கலில் லாட்டரியில் வெல்ல பல முறை முயன்றும் முடியவில்லை. இதையடுத்து அவர் இஸ்மாயில் ஆசிம் கான் என்ற சாமியாரை அணுகினார்.
அந்த சாமியார் பூஜை செய்கிறேன் என்ற பெயரில் நடிகையின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவர் நடிகையிடம் காணிக்கையாக ரூ. 26 லட்சம் கேட்டுள்ளார். நடிகையும் பணத்தை கொடுக்க அந்த சாமியார் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து சாமியார் பணத்துடன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இதையடுத்து நடிகை போலீசில் சாமியார் மீது புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் சாமியார் கைது செய்யப்பட்டார். ஆனால் அவரது உதவியாளர் தலைமறைவாகிவிட்டார்.


Click it and Unblock the Notifications
