பலாத்காரம் செய்வோம், கொலை செய்வோம்: டிவி நடிகையை மிரட்டிய 5 பேர் கைது
டேராடூன்: தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் ரோஷினி வாலியா சென்ற காரை பின்தொடர்ந்து வந்து பலாத்காரம் செய்வோம், கொலை செய்வோம் என மிரட்டிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகாராணா பிரதாப் இந்தி தொலைக்காட்சி தொடரில் மகாராணா பிரதாப்பின் முதல் மனைவியாக நடித்து பிரபலம் ஆனவர் ரோஷினி வாலியா(13). மும்பையில் வசித்து வரும் அவர் ஷூட்டிங்கிற்காக உத்தரகண்ட் மாநிலம் டேராடூனுக்கு சென்றுள்ளார்.
அங்கு வாலியா மற்றும் அவரது வயதை ஒத்து உள்ள சிறுவர், சிறுமியர் ஒரு காரில் சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு காரில் இருந்தவர்கள் வாலியாவின் காரை பின்தொடர்ந்து வந்துள்ளனர். மேலும் வாலியாவை பார்த்து உன்னை பலாத்காரம் செய்வோம், கொலை செய்வோம் என்று மிரட்டியுள்ளனர். மேலும் அவரை திட்டி அசிங்கமாக பேசியுள்ளனர்.

இதனால் பயந்துபோன வாலியா தனது செல்போனில் போலீசாருக்கு போன் செய்தார். ஆனால் போலீசார் வாலியா சிறுமி என்பதால் அவதரது பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து வாலியா நேராக காவல் நிலையத்திற்கு சென்று தான் யார் என்பதை கூறிய பிறகே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் வாலியாவை கிண்டல் செய்து மிரட்டிய நபர்களை போலீசார் தேடிக் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications