கருப்பு பணம்.. அடுத்த பட்டியலில் செந்தில், கவுண்டமணி, வடிவேலுவா? கலாய்க்கும் "ட்விட்"வாலாக்கள்!!
டெல்லி: சுவிஸ் வங்கியில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்ததாக 3 பேரை மட்டுமே மோடி சர்க்கார் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப் போய் சமூக வலைதளங்களில் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறது.
கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்போர் குறித்து உச்சநீதிமன்றத்தில் ராம்ஜெத்மலானி ஒரு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
லோக்சபா தேர்தலின் போது பிரதமர் மோடியும் கருப்புப் பணம் குறித்து பிரசாரம் மேற்கொண்டார். ஆனால் மத்தியில் ஆட்சி அமைத்த பின்னர் அண்மையில் வெளிநாட்டில் கருப்புப் பணத்தை பதுக்கியவர் பட்டியலை வெளியிட முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

அருண்ஜேட்லி எச்சரிக்கை
பின்னர் திடீரென நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, விரைவில் கருப்புப் பணத்தைப் பதுக்கியோர் பெயர் வெளியாகும்.. இதனால் காங்கிரஸுக்கு தலைகுனிவு ஏற்படும் என்று எச்சரித்திருந்தார்.

உச்சநீதிமன்றத்தில் மூவர் பெயர்
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் வெளிநாட்டில் கருப்புப் பணத்தைப் பதுக்கியதாக மூவர் பெயரை மட்டும் மத்திய அரசு இன்று தெரிவித்தது.

யார் அந்த மூவர்?
மத்திய அரசு இன்று தாக்கல் செய்த அறிக்கையில், டாபர் குரூப்பின் பிரதீப் பர்மன், கோவா சுரங்க தொழிலதிபர் ராதா எஸ். திம்ப்லோ, தங்கம், வெள்ளி வர்த்தகர் பங்கஜ் சிமன்லால் லோத்யா ஆகியோரது பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

கிண்டல்
கருப்புப் பணத்தைப் பதுக்கிய எத்தனையோ அரசியல்வாதிகள் இருக்கும் போது மூவரது பெயரை மட்டும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருப்பது சமூக வலைதளங்களில் மிகக் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

இது எப்படி இருக்கு தெரியுமா?
இது தொடர்பாக ட்விட்டரில் #BlackMoney என்ற ஹேஸ்டேக்கில் பதிவான ஒரு சில ட்விட்டுகள்:
- @nishantberia என்பவர் உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் அணியை அறிவித்துஇட்டு அதில் நெக்ரா பெயர் மட்டும் இருக்கிறது.. கோஹ்லி, சச்சின் போன்றோர் பெயர் இடம்பெறாமல் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது என்கிறார்.
- @utkarshmp என்பவர் ஏன் 3 பேர் மட்டும்தான் இந்த பட்டியலில் இருக்கிறது? சக்திவாய்ந்த பலருக்கு இன்னும் கூடுதல் அவகாசமா? என்கிறார்.

அடுத்து என்ன செந்தில் கவுண்டமணி, வடிவேலா?
- @subbaramank என்பவரோ இப்ப மூன்று பேர்.. அடுத்து என்ன செந்தில், கவுண்டமணி, வடிவேலு என்கிற மாதிரியான பட்டியலா? என்று நக்கலடித்துள்ளார்.
- @srikantm என்பவரோ, 120 கோடி மக்களில் 3 பேர்தான் கருப்புப் பணம் வைத்துள்ளனரா? என்று கலாய்த்துள்ளார்.
|
அஸ்ஸாம் காங்கிரஸ் கேள்வி
அஸ்ஸாம் பிரதேச காங்கிரஸும் (@AssamPCC ) ட்விட்டர் கலாய்ப்பில் கை கோர்த்துள்ளது. "மோடி சர்க்கார் ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில் கருப்பு பணம் வைத்திருப்பதாக 3 பேரை மட்டுமே வெளியிட்டுள்ளது" என்று கிண்டலடித்துள்ளது.
@KKPrabhat என்பவரோ, கருப்புப் பணம் பற்றி குரல் கொடுத்த காங்கிரஸ் தலைவர்களில் சிலர், அக்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பெயர் இடம்பெறவில்லையே என்ற விரக்தி ஏற்பட்டிருக்கும் என்று கூறியுள்ளார்.
இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications