அதிமுகவின் முழு நேர "ஓனர்" இனி எடப்பாடி- ஓபிஎஸ் அணி மட்டுமே!
இனி அதிமுகவின் கட்சி, கொடி, சின்னம் என அனைத்தும் எடப்பாட- பன்னீர் அணிக்குத்தான் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துவிட்டது.
Recommended Video

டெல்லி: அதிமுகவின் கட்சி, கொடி, சின்னம் என அனைத்தையும் எடப்பாடி-ஓபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிவிட்டது. டிடிவி தினகரனின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது.
இனி அதிமுக கட்சி, கொடி, சின்னம் எல்லாம் எடப்பாடி- ஓபிஎஸ் அணிக்குத்தான்
இனி அதிமுகவின் கட்சி, கொடி, சின்னம் என அனைத்தும் எடப்பாடி அணிக்கு- ஓபிஎஸ் அணிக்குத்தான் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துவிட்டது.
டெல்லி : அதிமுகவின் கட்சி, கொடி, சின்னம் என அனைத்தையும் எடப்பாடி அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிவிட்டது. டிடிவி தினகரனின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. எடப்பாடி தலைமையில் ஒரு அணியும், ஓபிஎஸ் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வந்தனர்.

கட்சி, சின்னம் எல்லாம்
எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியதை போல் கடந்த மார்ச் 23-ஆம் தேதி இரட்டை இலை சின்னம், கட்சியின் பெயர் ஆகியவற்றை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து இரு அணியினரும் மாறி மாறி பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர்.

இரட்டை இலைக்காக...
அதிமுகவின் அணிகள் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி இணைந்தன. அதையடுத்து தேர்தல் ஆணையத்தில் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரங்களை வாபஸ் பெறுவது என்ற முடிவு எடுத்தனர். அதைத் தொடர்ந்து கட்சியின் பொதுக் குழுவை கூட்டி பொதுச் செயலாளர் பதவியை ரத்து செய்தனர். இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையத்திடம் இரு அணிகளும் ஒன்றாக சமர்ப்பித்தனர்.

இரட்டை இலை தங்களுக்கே...
அதிமுக இணைப்புக்கு பிறகு தினகரன் அணி உருவாயிற்று. இதையடுத்து தினகரன் அணியினரும் புதிய பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர். எனவே ஒவ்வொரு பேட்டியிலும் இரு தரப்பினரும் இரட்டை இலை தங்களுக்கே என்று கூறிவந்தனர்.

தேர்தல் ஆணையம்
சுமார் 8 மாதங்களாக போராடி வந்த நிலையில் இன்று இரட்டை இலை யாருக்கு என்பது குறித்து தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து இரட்டை இலையை எடப்பாடி அணிக்கே வழங்கியது. இனி கட்சி, சின்னம், கொடி என எல்லாம் எடப்பாடி- ஓபிஎஸ் அணிக்கே சொந்தம்.
-
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications