கடல் அலையில் சிக்கிய கம்பளி பூச்சி போல, வெள்ளத்தில் திணறும் மும்பை ரயில்கள்! #MumbaiRains
மும்பை கடும் மழை பெய்து வருவதால் மக்கள் எத்தகைய பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர் என்பது குறித்து டிவிட்டரில் கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன.
மும்பை: மும்பையில் கன மழையால் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியதால் ரயில்கள் கடல் அலையில் ஊர்ந்து செல்வது போல் காட்சியளிக்கிறது.
மகராஷ்டிரா மாநிலம், மும்பையில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் சாலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வாகனங்கள் சாலையில் செல்ல முடியாததால் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது.
இந்த நிலையில், மும்பையில் மழையின் தாக்கமும் அதனால் பாதிக்கப்படும் மக்களின் நிலை குறித்து சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன. அவற்றுள் சில உங்களுக்ககாக...
|
இதற்கு முன்னர் இப்படி இல்லை
மும்பை விமான நிலையத்தில் பலமான காற்று மற்றும் கனமழையால் வெளியே வர முடியாமல் 2 மணி நேரமாக விமானத்தில் உள்ள பயணிகள் என்று ஒரு வீடியோ காட்சி பதிவாகியுள்ளது.
|
கடல் அலையில் ஊர்ந்து செல்லும் ரயில்கள்
கனமழையால் மும்பை ரயில் நிலைய தண்டவாளங்கள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ள போதிலும் கடல் அலை போன்ற மழை நீரில் ஊர்ந்து செல்லும் ரயில்கள்.
|
இதுவல்லவா சான்ஸ்
காவி நிறத்திலான காரட் பொறியல் செய்ய முற்பட்ட போது அதற்கு நான் ஆட்சேபம் தெரிவித்து அதனுடன் பச்சை பீன்ஸை சேர்த்து இந்தியாவின் மதசார்பற்ற நிலையை நிலைநிறுத்தினேன். ஆட்சியாளர்களை கிண்டல் செய்ய இதுவல்லவோ சான்ஸ்.
|
நாங்களும் சிக்கிக் கொண்டோம்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகர் வெள்ளக் காடாக மாறியுள்ளதை போல் மும்பையும் வெள்ளக் காடாக மாறியுள்ளது என்கிறார் இந்த வலைஞர்.
|
நீச்சல்தான் இன்றைய விளையாட்டு
உலக விளையாட்டு தின வாழ்த்துகள். இன்றைய விளையாட்டு தேர்வு நீச்சலாகதான் இருக்கும். மகிழுங்கள் என்று மும்பை வெள்ளம் குறித்து பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.
|
வெள்ளத்தில் மிதந்து செல்லும் கார்
மும்பையில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு காரில் சென்ற போது சாலையில் உள்ள வெள்ளநீர் முகப்பு கண்ணாடி அளவுக்கு வருவதை இந்த வீடியோவில் படம் பிடித்துள்ளார் படத்தயாரிப்பாளர் அசோக் பண்டிட்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications