மோசமான மருத்துவ வசதி கொடுப்பேன்.. ஆங்கிலத்தில் தவறாக எழுதிய மோடி.. வைத்து செய்த நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மோசமான மருத்துவத்தை கொடுக்க வேண்டும் என்று கூறி மாட்டிக்கொண்ட மோடி- வீடியோ

  டெல்லி: பிரதமர் மோடி தொடக்க காலங்களில் ஆங்கிலத்தில் பேசி கொண்டு இருந்தார். அதன்பின் இந்தியாவில் எங்கு சென்றாலும் ஹிந்தியில் பேசினார்.

  வெளிநாடுகளில் மட்டும் ஆங்கிலத்தில் பேசினார். இப்போதெல்லாம் வெளிநாட்டில் கூட ஹிந்தியில்தான் பேசிக் கொண்டு இருக்கிறார்.

  அவரது ஆங்கிலத்தை அமெரிக்க அதிபர் கூட கிண்டல் செய்து இருக்கிறார். இந்த நிலையில் பிரதமர் மோடி டிவிட்டரில் தவறான ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறார்.

  என்ன போஸ்ட்

  அவர் தனது போஸ்ட்டில் ''மோசமான மற்றும் விலை குறைவான மருத்துவம் கொடுக்க நாம் எல்லோரும் சேர்ந்து உழைக்க வேண்டும்'' என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். ''ஏழைகளுக்குக் குறைந்த விலையில் நல்ல மருத்துவம் கிடைக்க வேண்டும்'' என்று எழுத அவர் தவறாக எழுதி இருக்கிறார்.

  உண்மைதான்

  இது டிவிட்டரில் வைரலானது. இவர் ''மோசமான மருத்துவம் குறைந்த விலையில் வேண்டுமா. ஆமா சரியாகத்தான் சொல்லி இருக்கீங்க. பக்கோடா எஃபெக்ட்'' என்றுள்ளார்.

  உலகத்திலேயே

  இவர் ''இதை எழுதியவர்களை உடனடியாக வேலையைவிட்டு நீக்க வேண்டும். எந்தப் பிரதமரும் உலகத்தில் இப்படி ஒரு வாக்குறுதி கொடுத்தது இல்லை'' என்றுள்ளார்.

  சரிதான் சரிதான்

  இவர் ''கடைசியில் இந்த அரசு இப்போதுதான் உண்மையைப் பேசி இருக்கிறது. உங்கள் அரசின் கீழ் மருத்துவம் மோசமானதை ஒப்புக்கொண்டதற்கு நன்றி'' என்றுள்ளார்.

  வேற லெவல்

  இவர் ''நாம் எல்லோரும் சேர்ந்து அடுத்த முறையும் பாஜகவிற்கு வாக்களிப்போம் என உறுதிமொழி எடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் நமக்கு மோசமான மருத்துவம் கொடுப்பார்கள்'' என்று மிகவும் காமெடியாக குறிப்பிட்டு உள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Modi in twitter posted '' Let us work together in providing the poor quality and affordable healthcare: PM''. Twitter teaches Modi on English after wrong tweet.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற