For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாலியல் புகாரில் பதவியிழந்தவரை இப்படியா அசிங்கப்படுத்துவது.. ஆம் ஆத்மிக்கு வந்த சோதனை! #SandeepKumar

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: கெஜ்ரிவால் அரசில் சமூக நலத்துறைக்கு பொறுப்பு வகித்து வந்தவர் அமைச்சர் சந்தீப்குமார். இவர் ஆறு பெண்களுடன் இருப்பது போன்ற சிடி இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியானது. ஆனால், இந்த வீடியோ சித்தரிக்கப்பட்டது என்று சந்தீப்குமார் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை உள்ளூர் சேனல் ஒன்று அமைச்சர் சந்தீப்குமார் ஆறு பெண்களுடன் இருக்கும் அந்த வில்லங்க வீடியோவை ஒளிபரப்பு செய்தது. இதனால், அதிர்ச்சியடைந்த முதல்வர் கெஜ்ரிவால், உடனடியாக சந்தீப்குமாரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார்.

இதை டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கேலி செய்துவருகிறார்கள் நெட்டிசன்கள்.

இலவசம்

டெல்லி மக்களுக்கு குடிநீர், மின்சாரத்தை இலவசமாக தருவதாக ஆம் ஆத்மி வாக்குறுதி கூறியிருந்த நிலையில், அது முடியாமல் போனதால் அவை இலவசமாக கிடைக்கும், சிறைச்சாலைக்கு வரிசையாக செல்ல ஆரம்பித்துவிட்டனர் என்கிறது இந்த டிவிட்.

நக்கல்

சிம்பிளான ரூமில்தான் ஜல்சா நடந்துள்ளது என்பது வீடியோவை பார்த்தால் தெரிகிறது. ஹோட்டலில் நடக்கவில்லை. இதுவே ஆம் ஆத்மியின் எளிமைத் தன்மை என்று நக்கல் செய்துள்ளது இந்த டிவிட்.

இது ஓவர்

அட விடுங்கப்பா.. சும்மா உட்கார்ந்து டிவிட்டரில் எழுதிக்கொண்டிருக்காமல், சந்தீப் குமார் ஏதாவது 'வேலையாவது பார்த்தாரே...' என வஞ்ச புகழ்ச்சி அணியில் டிவிட்டியுள்ளார் இந்த பெண். கேஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவர்கள் டிவிட்டரில் பிசியாக டிவிட்டிக்கொண்டிருப்பதை இவ்வாறு அப்பெண் குறிப்பிட்டு கேலி செய்கிறார்.

வில்லங்கம்

இது கொஞ்சம் வில்லங்கமான டிவிட்தான். இதற்கு விளக்கமெல்லாம் தர முடியாது. புரிஞ்சவங்க பிஸ்தா.. என்ற டிவி விளம்பர வரி இதற்கும் பொருந்தம்.

English summary
Twitterati can’t stop trolling the politician and digging out his women-centric tweets from the past when he got women to tie rakhi on his wrist on Raksha Bandhan and when he met little kids in Delhi and promised them education.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X