'ஆம் ஆத்மி' கேஜ்ரிவாலுக்கு 10 பெட்ரூம் கொண்ட 2 பெரிய வீடு... டெல்லியில்!
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஒரு வழியாக டெல்லியில் தங்க வீடு பார்த்து விட்டனர். பகவான்தாஸ் ரோடு பகுதியில் அருகருகே உள்ள 2 பெரிய வீடுகளை முதல்வருக்காக பார்த்துள்ளனர். இது டூப்ளக் வீடாகும். இந்த இரண்டு வீடுகளிலும் தலா 5 படுக்கை அறைகள் உள்ளனவாம்
இந்த வீட்டில்தான் இனிமேல் கேஜ்ரிவாலும், அவரது குடும்பத்தினரும் தங்குவார்கள்.
இந்த வீடுகள் இரண்டையும் சேர்த்தால் பெரிய பங்களா என்று கூறவும் முடியாது, அதேசமயம், ஆடம்பரம் இல்லாத சின்ன வீடு என்றும் கூறவும் முடியாது. நடுத்தர ரகமாக இருக்கிறது.

10 பெட்ரூம்
இந்த இரண்டு வீடுகளிலும் தலா 5 படுக்கை அறைகள் உள்ளனவாம். இவற்றின் மொத்த பரப்பளவு 9000 சதுர அடியாகும். அதில் 6000 சதுர அடி அளவுக்கு வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

நீதிபதிகளின் வீடுகளை விடப் பெரியது
இதுகுறித்து டெல்லி நகர்ப்புற வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில்,சில மத்திய அமைச்சர்கள், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பலருக்கு ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளை விட இவை பெரியவை என்றனர்.

சின்ன வீட்டில் வசிப்பதாக சொன்னாரே...
கேஜ்ரிவாலுக்குப் பெரிய வீடுகளை ஒதுக்கியுள்ளது இப்போது எதிர்க்கட்சிகளுக்கு பெரிய வசதியாக போய் விட்டது. காரணம், தேர்தல் பிரசாரத்தின்போது கேஜ்ரிவால் கூறுகையில், டெல்லியில் மற்ற சாமானிய மக்கள் வசிப்பதைப் போல தானும் ஒரு சாதாரண பிளாட்டில்தான் வசிப்பேன் என்று கூறியிருந்தார். ஆனால் அவருக்குத் தற்போது பங்களா சைஸுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது ஆம் ஆத்மிக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

இப்போதைக்கு காஸியாபாத்தில் வாசம்
தற்போது முதல்வர் கேஜ்ரிவால், உ.பி. மாநிலம் காஸியாபாத்தில் உள்ள தனது கெளசாம்பி பிளாட்டில்தான் வசித்து வருகிறார். அவரது குடும்பமும் அங்குதான் உள்ளது. இந்த வீடு, கேஜ்ரிவாலிந் மனைவிக்கு ஒதுக்கப்பட்டதாகும். அவர் இந்திய வருவாய்த்துறை அதிகாரி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டில் ஒன்று... தங்குவதற்கு
கேஜ்ரிவாலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு வீடுகளில் ஒன்றை அவர் தங்குவதற்குப் பயன்படுத்திக் கொள்வாராம். இன்னொரு வீடு முகாம் அலுவலகமாக பயன்படுத்தப்படுமாம்.

7/6 வீடு... 7/7 அலுவலகம்...
இரண்டு வீடுகளில் 7/6 என்ற இலக்கமிட்ட வீட்டை, தானும் தனது குடும்பத்தினரும் தங்க கேஜ்ரிவால் பயன்படுத்திக் கொள்ளவுள்ளார். 7/7 இலக்கமிட்ட வீடு அவரது அலுவலகமாக பயன்படுத்தப்படும்.

மனைவி, அப்பா, அம்மாவுடன் ஷிப்ட் ஆகிறார்
விரைவில் தனது மனைவி, இரு குழந்தைகள், பெற்றோருடன் டெல்லி வீட்டுக்குக் குடி புகவுள்ளார் கேஜ்ரிவால். ஆனால் எப்போது குடி போகப் போகிறார்கள் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

கூட்டிப் பெருக்கி கழுவி சுத்தப்படுத்துகிறார்கள்
வீட்டின் சாவிகள் தற்போது டெல்லி அரசிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. வீட்டை கூட்டிப் பெருக்கி கழுவி சுத்தப்படுத்தும் பணிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கேஜ்ரிவால் குடும்பத்தினர் வீட்டுக்கு வந்து நேரில் பார்வையிட்டுச் சென்று விட்டனராம். எனவே சுத்தப்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications