ஆக்ராவில் விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றாமல் போட்டோ எடுத்த கொடுமைக்காரர்கள்!
Subscribe to Oneindia Tamil
ஆக்ரா: ஆக்ராவில் வேகமாக வந்த லாரி ஒன்று பைக் ஒன்றின் மீது மோதியதில் ஒரு பெண்ணும், குழந்தையும் உயிரிழந்தனர். அவ்விபத்து நடந்தபோது மக்கள் அவர்களுக்கு உதவாமல் போட்டோ எடுத்த சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
பைக்கில் வந்த மெஹ் சிங் என்னும் அந்நபர் தன்னுடைய காயமடைந்த குழந்தையை தோளில் போட்டுக் கொண்டு உதவி கேட்டுள்ளார். ஆனால் யாருமே அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை.

பதிலாக அவர்களில் சிலர் தங்கள் செல்போனில் விபத்தைப் படம் பிடிப்பதில் மும்முரமாக இருந்துள்ளனர். யாருமே அவருடைய கதறலுக்கு செவி சாய்க்கவில்லை.
இச்செயலால் கோபமடைந்த அவர் போனில் போட்டோ எடுத்துக் கொண்டிருந்த ஒருவரை ஓங்கி அறைந்தார். எனினும் இவ்விபத்தில் அவரது மனைவியும், குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications