புர்த்வான் அருகே மீண்டும் பரபரப்பு... 200 வெடி குண்டுகள், நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் போலீசார் 200 வெடிகுண்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் புர்த்வான் மாவட்டத்தில் உள்ள பெல்சூர் கிராமத்தில் குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் பெல்சூர் கிராமத்தில் சனிக்கிழமை இரவு தீவிர சோதனை செய்தனர். அப்போது ஒரு இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 குண்டுகள், சில நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக போலீசார் இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கும் கடந்த அக்டோபர் மாதம் 2ம் தேதி புர்த்வான் மாவட்டத்தில் உள்ள காக்ரகாரில் நடந்த குண்டுவெடிப்புக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேற்கு வங்க மாநிலத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த ஜமாத்துல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பினர் அதிக அளவில் செயல்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications