தாக்குதலுக்கு மறுநாளே சோகம்.. வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்.. விமானப்படை வீரர்கள் 6 பேர் பலி!

காஷ்மீரில் மிக் 21 போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பயிற்சியின் போது வெடித்து சிதறிய இந்திய போர் விமானம்- வீடியோ

    ஸ்ரீநகர்: காஷ்மீரில் எம் 17 ரக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி, வெடித்து சிதறி விபத்துக்கு உள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் விமானப்படை வீரர்கள் 6 பேர் மற்றும் பொதுமக்களில் ஒருவர் பலியாகி உள்ளனர்.

    இந்திய விமானப்படை தற்போது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து இருக்கிறது. நேற்று இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்தியது.

    விமான படைக்கு சொந்தமான மிராஜ் 2000 ரக விமானம் இதில் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டது. மொத்தம் 12 விமானங்கள் இணைந்து இந்த தாக்குதலை நடத்தியது. இந்த நிலையில் இன்று ஒரு விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

     இந்தியா பயிற்சி

    இந்தியா பயிற்சி

    பாகிஸ்தானுடன் பதட்டம் நிலவி வரும் நிலையில் இந்திய விமானப்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. ஹெலிகாப்டர்கள் மூலம் விமானிகள் பயிற்சி செய்து வருகின்றனர். இப்படி ஒரு பயிற்சி இன்று விபத்தில் முடிந்துள்ளது.

    எம் 17

    எம் 17

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பத்காம் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த எம் 17 ஹெலிகாப்டர் திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் விமானப்படை வீரர்கள் 6 பேர் மற்றும் பொதுமக்களில் ஒருவர் பலியாகி உள்ளனர்.

    கட்டுப்பாடு இழந்தது

    கட்டுப்பாடு இழந்தது

    பயிற்சி செய்து கொண்டு இருந்த போது கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் வெடித்து சிதறிய காரணத்தால் அதிலிருந்து விமானிகள் வெளியேற முடியவில்லை.

    எங்கு

    பத்காமிலிருந்து 7 கிமீ தூரத்தில் இந்த விபத்து நிகழ்ந்து இருக்கிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்து உள்ளது. நேற்றுதான் பாகிஸ்தான் மீது அதிரடி விமானத் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இன்று இந்த அசம்பாவிதம் நடந்து இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+