காஷ்மீர் சிறுமி விவகாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக அமைச்சர்கள்.. திடீர் பதவி விலகல்!
காஷ்மீரில் கொல்லப்பட்ட 8 வயது சிறுமி விவகாரத்தில் மோசமான கருத்துக்கள் கூறிய பாஜக எம்.எல்.ஏக்கள் அமைச்சர் பதவியை விலகி இருக்கிறார்கள்.
காஷ்மீர்: காஷ்மீரில் கொல்லப்பட்ட 8 வயது சிறுமி விவகாரத்தில் மோசமான கருத்துக்கள் கூறிய பாஜக எம்.எல்.ஏக்கள் அமைச்சர் பதவியை விலகி இருக்கிறார்கள்.
காஷ்மீரில் இருக்கும் கத்துவா என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது பள்ளி படிக்கும் சிறுமி ஒருவர் 7 பேரால் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கிறார். இந்த கொலை மற்றும் வன்புணர்வு வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இதில் தொடர்புடைய எல்லோரும் பாஜக உள்ளிட்ட பல்வேறு இந்துத்துவா அமைப்புகளுடன் நெருக்கமாக இருப்பவர்கள். இந்த விஷயம் காரணமாக பாஜக கட்சியை சேர்ந்த சிலர், குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசியுள்ளனர்.
அதேபோல் குற்றவாளிக்கு ஆதரவாக நடந்த ஊர்வலத்தில், ஜம்முவின் பாஜக மாநில அமைச்சர்கள், லால் சிங், சந்திர பிரகாஷ் கங்கா ஆகியோர் கலந்து கொண்டார்கள். இது பெரிய அளவில் சர்ச்சையை உருவாக்கியது. குற்றவாளிகளுக்கு ஆதரவாக அமைச்சர்களே இப்படி ஊர்வலம் நடத்தலாமா என்று கேள்வி எழுந்து இருந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த அமைச்சர்கள் பதவி விலகி இருக்கிறார். இருவரும் தாமாக முன்வந்து பதவி விலகல் கடிதத்தை அளித்துள்ளதாக பாஜக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கட்சியைவிட்டு வெளியேறவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்












Click it and Unblock the Notifications