ஒரே நாளில் இரண்டு பயங்கர தீவிபத்துகள் – பதற்றத்தில் டெல்லி மக்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் இன்று ஏற்பட்ட இரண்டு வெவ்வேறு தீவிபத்துகளினால் தலைநகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள சாந்தினி சவுக் கினார் பஜார் மற்றும் என்.ஐ.ஐ.டி பகுதியில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகின்றது.

சாந்தினி சவுக் தீவிபத்து:

டெல்லி சாந்தினி சவுக் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

25 தீயணைப்பு வண்டிகள்:

சுமார் 25 தீயணைப்பு வண்டிகளில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

Two Massive fire accidents in Delhi today…

டிரான்ஸ்பார்மரில் தீ:

நெருக்கடியான அந்த பகுதியில் உள்ள ஒரு மின்சார டிரான்ஸ்பார்மரில் தீப்பிடித்துள்ளது. குறுகலான பாதை என்பதால் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

யாருக்கும் பாதிப்பில்லை:

இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின் துறை அலட்சியம்:

இதுபோன்று அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், இதற்கு மின்துறையே பொறுப்பு என்றும் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

என்.ஐ.ஐ.டி தீவிபத்து:

இதே போன்று, இன்று அதிகாலை டெல்லி, ஹாமில்டன் ஹவுஸ் பகுதியில் அமைந்துள்ள என்.ஐ.ஐ.டியிலும் பயங்கர புகையுடன் கூடிய தீவிபத்து ஏற்பட்டது.

முதல் மாடியில் புகை:

ஜிம் பகுதியில் இருந்து பரவிய அத்தீயானது, என்.ஐ.ஐ.டியின் முதல் மாடியில் அமைந்துள்ள நூலகத்தில் பரவி, ராமா ஹவுஸ் முழுவதையும் ஆக்கிரமித்திருந்தது.

மின்சார வயர்களின் குறைபாடு:

கிட்டதட்ட 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மின்சார வயர்களின் குறைப்பாட்டினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

மாணவர்கள் நலம்:

மேலும், இவ்விபத்தினால் யாரும் பாதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+