காஷ்மீர் ராணுவ முகாமில் வாலாட்டிய தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
யூரி தாக்குதலுக்கு பழி தீர்க்கும் விதமாக இந்திய ராணுவம் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தி 7 தீவிரவாத முகாம்களை அழித்தது. அந்த தாக்குதலின் போது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இரண்டு பேர் பலியாயினர். இதனை தொடர்ந்து, இது போன்ற ஊடுருவல் முயற்சிகள், எல்லையில் அத்துமீறல் உள்ளிட்டவற்றை பாகிஸ்தான் அரங்கேற்றி வருகிறது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குப்புவாரா மாவட்டத்தில் உள்ள ஹன்ட்வாராவின் லங்கேட் பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது இன்று காலையில் தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அதையடுத்து நடைபெற்ற சண்டையில் தீவிரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ராணுவ சீருடை அணிந்து வந்த தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியதாகவும், அங்கு தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தீவிரவாதிகள் எத்தனை பேர் இந்த தாக்குதலை நடத்தினார்கள் என்று இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
முன்னதாக, ஜம்மு - காஷ்மீர் மாநிலம் நவ்காம் பகுதியில் நடைபெற்ற இரண்டு ஊடுருவல் முயற்சிகள் மற்றும் ராம்பூரில் நடைபெற்ற மற்றொரு ஊடுருவல் முயற்சி என நள்ளிரவில் நடைபெற்ற, தீவிரவாதிகளின் மூன்று ஊடுருவல் முயற்சிகளை பாதுகாப்பு படையினர் முறியடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications