ஒடிசாவில் திருமணம் செய்வதாகக் கூறி மைனர் மகள்கள் ரூ. 20,000க்கு விற்பனை... பெற்றோர் கைது
புவனேஷ்வர்: தனது இரண்டு மைனர் சகோதரிகளை ரூ. 20 ஆயிரத்திற்கு விற்று விட்டதாக ஒடிசா போலீசில் பெற்றோர் மீது மகள் ஒருவர் அளித்துள்ள புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒடிசாவிலுள்ள சாம்பல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பா. கடந்தாண்டு இவருக்கு திருமணம் நடந்தது. இவருக்கு ஜோதி (13), அஞ்சலி (14) உட்பட உடன்பிறந்தவர்கள் ஐந்து பேர் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த மாதம் ஒன்றாம் தேதி ஒரு சகோதரியையும், அதற்கு அடுத்த சில தினங்களில் மற்றொரு சகோதரியையும் காணவில்லை என புஷ்பா போலீசில் புகார் அளித்துள்ளார்.

அப்புகாரில், இது தொடர்பாக தனது பெற்றோரிடம் அவர் கேட்டதாகவும், அதற்கு அவர்கள் அச்சிறுமிகளுக்கு திருமணமாகி விட்டதாக பதிலளித்ததாகவும் கூறியுள்ளார்.
ஆனால், பெற்றோரின் பதிலில் சந்தேகமடைந்த புஷ்மா, தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் போலீசில் புகார் அளித்துள்ளார். தனது தங்கைகள் ரூ. 20 ஆயிரத்திற்கு மத்தியப் பிரதேசத்திற்கு விற்கப் பட்டு விட்டதாக புஷ்பா சந்தேகம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் இடைத்தரகர் ஒருவர் செயல்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
ஏற்கனவே, திருமணத்திற்கு முன்னர் தன்னையும் பெற்றோர் விற்கப் பார்த்ததாகவும், அதிர்ஷ்டவசத்தால் திருமணம் நடைபெற்று தான் தப்பி விட்டதாகவும் புஷ்பா தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்தப் புகாரை புஷ்பாவின் பெற்றோர் மறுக்கின்றனர். தனது இரண்டு மகள்களையும் மத்தியப் பிரதேசத்தில் திருமணம் செய்து கொடுத்திருப்பதாகவும், விற்கவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால், மாப்பிள்ளைகளின் விபரத்தைக் கூற அவர்கள் மறுத்து விட்டனர்.
இதனால், சந்தேகமடைந்த போலீசார் அச்சிறுமிகளுக்கு திருமணம் நடந்திருந்தாலும் அது சட்டப்படி குற்றமே எனக் கூறி புஷ்பாவின் பெற்றோரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அதோடு, மத்தியப்பிரதேசத்திற்கு போலீசாரை அனுப்பி மாயமான இரண்டு மைனர் சிறுமிகளை மீட்கும் நடவடிக்கையையும் முடுக்கி விட்டுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications