டெல்லியில் ஒரே நாளில் 2 சிறுமிகள் பலாத்காரம்- போலீஸ் மீது முதல்வர் கேஜ்ரிவால் பாய்ச்சல்!
டெல்லி: டெல்லியில் நேற்று இரவு மட்டும் 2 சிறுமிகள் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி போலீசார் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க தவறிவிட்டதாக முதல்வர் கேஜ்ரிவால் சாடியுள்ளார்.
டெல்லியில் நங்லோய் பகுதியில் ராம்லீலா நிகழ்ச்சியின் போது திடீரென மின் தடை ஏற்பட்டது. அப்போது மர்ம நபர்கள் இரண்டரை வயது சிறுமியை கடத்தி சென்றனர்.

இன்று அதிகாலை அந்த சிறுமி பூங்கா ஒன்றில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவர் உடனடியாக சஞ்சய்காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர். இதேபோல் நேற்று இரவு ஆனந்தவிகார் பகுதியில் 5 வயது சிறுமி கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார். அந்த சிறுமியும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த 2 சிறுமிகளும் கவலைக்கிடமாக உள்ளனர். ஒரே நாளில் டெல்லியில் 2 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
Repeated rape of minors is shameful and worrying. Delhi police has completely failed to provide safety. What are PM n his LG doing?
— Arvind Kejriwal (@ArvindKejriwal) October 17, 2015 இதனிடையே டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுமியை டெல்லி மருத்துவமனையில் சென்று பார்த்து அவருக்கு ஆறுதல் கூறினார்.
இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கேஜ்ரிவால், மக்களுக்கு பாதுகாப்பு வழங்க டெல்லி போலீசார் தவறி விட்டனர். பிரதமரும், துணைநிலை ஆளுநரும் என்ன செய்கிறார்கள்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications