ஜெயலலிதாவுக்காக பிணையம் அளித்தவர்கள் யார் தெரியுமா?
பெங்களூர்: ஜெயலலிதாவுக்காக மார்க்கெட் மதிப்பில் 6 கோடி (அரசு மதிப்பில் 2 கோடி) மதிப்புள்ள சொத்துக்களை இருவர் பிணையமாக கொடுத்துள்ளனர்.
சுப்ரீம் கோர்ட் ஜெ. உட்பட நால்வருக்கும் தலா 2 பேர் பிணையம் தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது. அதன்படி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் உச்சநீதிமன்ற ஆர்டரை ஜெயலலிதா வக்கீல்கள் சமர்ப்பித்தனர்.

இதையடுத்து ஜாமீன் நடைமுறைகளை நீதிபதி குன்ஹா ஆரம்பித்தார். ஜெயலலிதாவுக்காக பரத் மற்றும் அதிமுக கர்நாடக செயலாளர் வா.புகழேந்தியின் மனைவி குணஜோதி ஆகிய இருவர் பிணையம் அளித்தனர். பரத் ஒரு தொழிலதிபராகும்.
பெங்களூர் அடுத்த ஜிகனி பகுதியில் சர்வே எண் 442ல் 32 குண்டே (கர்நாடகாவில் நிலத்தை அளவீடு செய்யும் பெயர்) நிலம் பரத்துக்கு உள்ளது. இதன் மார்க்கெட் வேல்யூ ரூ.5 கோடியாகும். இதை அவர் பிணையம் அளித்தார். ஆனால் ரூ.1 கோடி மதிப்புக்கு பிணையம் அளித்தால் போதும் என்று விதிமுறை இருந்ததால், அதுகுறித்து பரத் நீதிபதி குன்ஹாவிடம் விளக்கம் அளித்தார். அதாவது நிலத்தின் மார்க்கெட் வேல்யூ ரூ.5 கோடி என்ற போதிலும், அரசு வழிகாட்டு நெறிமுறைப்படி அதன் வேல்யூ ரூ.1 கோடி என்று பரத் தெரிவித்து பிணையம் அளித்தார்.
குணஜோதி தனது 1 கோடி மதிப்புள்ள நிலத்தை பிணையம் அளித்தார். ஆகமொத்தம் 6 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பிணையமாகின. இதையடுத்து பார்மாலிட்டிக்காக சில கேள்விகளை குன்ஹா அவர்களிடம் கேட்டார். மேலும், ஜெயலலிதா தலைமறைவானால் உங்கள் சொத்துக்கள் முடக்கப்படும் என்பது உங்களுக்கு தெரியும்தானே என்று கேட்டார். ஆம் என்று அவர்கள் கூறியபிறகு பிணையத்தை ஏற்றுக்கொண்டார். மேலும் குற்றவாளிகளை எப்போது கோர்ட் அழைத்தாலும் அவர்கள் ஆஜராவதை நீங்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றும் குன்ஹா தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications