சினிமா ஸ்டைலில்... மயக்கமருந்து கொடுத்து போலீசை தூங்க வைத்து தப்பிய கைதிகள்!
அமிர்தசரஸ்: சினிமா படப் பாணியில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, போலீஸ் காவலில் இருந்த இரண்டு கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் பஞ்சாபில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் பகுதியில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்களாகக் கருதப்படுகின்றனர் மனோகர் குமார், குர்பீக்சிங் என்ற இரு விசாரணைக் கைதிகள்.
இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர் படுத்த, நேற்று கபூர்தாலா சிறையில் இருந்து போலீஸ் வேனில் போலீசார் அழைத்துச் சென்றனர்.
அப்போது, சாலையோர டீக்கடை ஒன்றில் டீ சாப்பிட போலீசார் வேனை நிறுத்தியுள்ளனர். இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட கைதிகள் இருவரும், பாதுகாப்புக்கு வந்த போலீசாருக்கு குளிர்பானம் வாங்கி கொடுத்துள்ளனர்.
அதில் மயக்க மருந்து கலந்து இருப்பது தெரியாமல், போலீசாரும் அதனைக் குடித்து விட்டனர். இதனால், சிறிது நேரத்திலேயே போலீசார் மயங்கினர். அதனைத் தொடர்ந்து கைதிகள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் பஞ்சாபில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைந்து செயல்பட்ட போலீசார் மனோகர் குமாரைக் கைது செய்தனர். குர்பீர் சிங்கைத் தேடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு கைதிகள் மீதும், அவர்களிடம் குளிர்பானத்தை வாங்கிக் குடித்து மயங்கிய நான்கு போலீசார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications