அசாமில் மரத்தில் தொங்கிய மாணவிகளின் சடலம்: பலாத்காரம் செய்து கொலையா?
கவுகாத்தி: பள்ளி மாணவிகள் இருவர் பலாத்காரம் மற்றும் கொலை செய்யப்பட்டு மரத்தில் தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் அசாம் மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தின் கரிம்கஞ்ச் மாவட்டத்திலுள்ள நிலாம்பஜார் பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவிகள் கடநத் புதன்கிழமை முதல் திடீரென மாயமாகிவிட்டதாக அவர்களது குடும்பத்தார் தேடி வந்தனர். இந்நிலையில், இந்திய-வங்கதேச எல்லையில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு மரத்தில் இருவரும் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
ஒரே கயிற்றை பயன்படுத்தி இருவரும் கொலையானது தெரியவந்தது. இவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும்போதிலும், பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே அதுகுறித்து உறுதியாக தெரிவிக்க முடியும் என்று காவல் துறை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications