ம.பி.யில் பயங்கரம்: 2 வயது பெண் குழந்தையை பலாத்காரம் செய்த 30 வயது உறவுக்காரர்
இந்தூர்: மத்திய பிரதேசத்தில் இரண்டரை வயது பழங்குடியின பெண் குழந்தை தனது உறவினரால் பள்ளியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரில் உள்ள விப்ஜியார் பள்ளியில் 6 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு கொடூரம் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஜாபுவா மாவட்டத்தில் உள்ள லாம்பெலா கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டரை வயது பெண் குழந்தை படித்து வருகிறது. அந்த குழந்தை பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது அதன் உறவினர் தனு புரியா(30) குழந்தையை பள்ளியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். அதன் பிறகு அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் இந்த சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்து தனுவை தேடினர். இதையடுத்து அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications