உடை மாற்றும் அறையை நோக்கி கேமரா கூடாது – உ.பி கடைகளுக்கு அரசு நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள துணி்க்கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் ரகசிய கேமராக்கள் குறித்து கடும் நடவடிக்கை எடுக்க மாநில முதல்வர் அகிலேஷ்யாதவ் உத்தரவிட்டு்ள்ளார்.
இதனையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள ஷாப்பிங் மால்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து துணி கடைகளி்ல் உடை மாற்றும் அறையை நோக்கி வைக்கப்பட்டிருக்கும் கேமராக்களை வேறு திசை நோக்கி வைக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கோவா மாநிலத்தில் துணிக் கடை ஒன்றில் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டடிருப்பதை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கண்டுபிடித்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படு்த்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications