பெண் நிருபரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட உபேர் டாக்ஸி டிரைவர் கைது... கொல்கத்தாவில்!
கொல்கத்தா: பெண் பயணியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட உபேர் கால் டாக்ஸி டிரைவரை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நேற்றிரவு சர்வே பார்க் பகுதியில் இருந்து, காமாக் தெரு பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக உபேர் கால் டாக்ஸியில் ஏறியுள்ளார் அப்பெண். அவர் ஆங்கில தினசரி ஒன்றின் பெண் செய்தியாளர் ஆவார்.

கால் டாக்ஸியில் ஏறிய சிறிது நேரத்திலேயே அப்பெண்ணிடம் தகாத முறையில் நடக்கத் தொடங்கியுள்ளார் டிரைவர் முகம்மது குர்பான். தகாத வார்த்தைகளால் பெண் பயணியை திட்டிய டிரைவர், அவரிடம் அத்துமீறி நடக்க முயற்சித்துள்ளார்.
இது தொடர்பாக அப்பெண் கொல்கத்தா போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட உபேர் டிரைவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட உபேர் கால் டாக்ஸி டிரைவரைக் கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த டிரைவர் உடல் ரீதியாக பெண் செய்தியாளரிடம் தவறாக நடக்கவில்லை. அதேசமயம், வார்த்தையால் அநாகரீகமாக நடந்து கொண்டதாக போலீஸார் கூறியுள்ளனர்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications