உதம்பூர் தாக்குதல்: நவேத்தின் கூட்டாளிகள் இருவரின் வரைபடம் வெளியீடு.. தீவிர தேடுதல் வேட்டை
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் பிடிபட்ட பாகிஸ்தான் தீவிரவாதி முகம்மது நவேத்தின் கூட்டாளிகள் இருவர் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து அவர்களின் பெயர் விவரங்களையும், வரைபடத்தையும் வெளியிட்டுள்ள தேசிய புலனாய்வு ஏஜென்சி அவர்களைப் பிடிக்கும் நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டுள்ளது.
இந்த இருவரும் நவேத்தின் கூட்டாளிகள் ஆவர். இவர்கள்தான் உதம்பூர் தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தியவர்கள், நவேத்துக்கு உதவியவர்கள் என்றும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த இருவரும் பாகிஸ்தானின் கைபர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகம்மது பய், அபு ஒகாஷா
இவர்களின் பெயர்கள் ஜர்கம் என்கிற முகம்மது பய் மற்றும் அபு ஒகாஷா என்பதாகும். இவர்கள் இருவர் குறித்த தகவல்களை நவேத் தெரிவித்துள்ளான். இதன் அடிப்படையில் இவர்களின் வரைபடங்களை தேசிய புலனாய்வு ஏஜென்சி உருவாக்கியுள்ளது.

வரைபடம் வெளியீடு
இந்த இருவரின் வரைபடங்களையும் வெளியிட்டுள்ள தேசிய புலனாய்வு அதிகாரிகள், இவர்களுக்கு தலைக்கு ரூ. 5 லட்சம் பரிசையும் அறிவித்துள்ளது. இவர்களைப் பிடிக்க தீவிர வலையும் விரிக்கப்பட்டுள்ளது.

38 வயது மற்றும் 18 வயது
இந்த இருவரில் முகம்மது பய்யின் வயது 38 முதல் 40க்குள் இருக்கும் என்று தெரிகிறது. அபு ஒகாஷாவின் வயது 17 அல்லது 18 ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருவரும் ஹஸாரா கைபர் பக்துன்க்வா பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

நவேத், நோமனுக்கு உதவியவர்கள்
உதம்பூர் தாக்குதலில் ஈடுபட்ட நவேத் மற்றும் நோமனுக்கு இவர்கள்தான் உதவி செய்துள்ளனர். இதில் நோமன் பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டான்.

இந்தியாவில் பதுங்கியுள்ளதாக சந்தேகம்
முகம்மது பய் மற்றும் அபு ஆகியோர் தொடர்ந்து இந்தியாவிலேயே பதுங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருவரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications