வங்கதேசத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட 'உல்ஃபா' மூத்த தலைவர் அனூப் சேத்தியா ஜாமீனில் விடுதலை!!
குவஹாத்தி: உல்ஃபா தீவிரவாத அமைப்பின் பொதுச்செயலாளர் அனூப் சேத்தியா சிறையில் இருந்து நேற்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
எல்லை தாண்டி ஊடுருவியது, போலி பாஸ்போர்ட் வைத்திருந்தது, சட்டவிரோதமாக வெளிநாட்டுப் பணம் வைத்திருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வங்கதேசத்தில் கடந்த 1997-ஆம் ஆண்டு அனூப் சேத்தியா கைது செய்யப்பட்டார். இரு நாடுகளுக்கு இடையேயான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் கடந்த மாதம் 11-ந் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அவரை ஒரு கொலை வழக்குத்தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் கைது செய்தனர். அனூப் சேத்தியாவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட நான்கு வழக்குகளில் நான்காவது வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. அதையடுத்து அவர் விடுதலையானார்.
சிறையில் இருந்து விடுதலையான அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களது புரட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரை இழந்த பொது மக்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களது ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கிறேன்.
எனது கடந்த காலத் தவறுகளுக்காக அஸ்ஸாம் மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 1992- ம் ஆண்டு நடந்ததைப் போல, அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் எனக்கு உடன்பாடு இல்லை என்று பலர் கூறி வருகின்றனர்.
ஆனால், உண்மையில் அமைதிப் பேச்சுவார்த்தையை நான் ஆதரிக்கிறேன். அப்போது இருந்த அரசியல் நிலைமை இப்போது மாறிவிட்டதால், மீண்டும் புதிதாக பேச்சுவார்த்தை தொடங்க விரும்புகிறோம்.
மத்திய அரசு, அஸ்ஸாம் மாநில அரசு, உல்ஃபா அமைப்பு ஆகியோரிடையே நடைபெறவுள்ள முத்தரப்பு பேச்சு வார்த்தையில் நான் பங்கேற்பேன் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications