பிரக்யா சிங் அழ.. உமா பாரதி தலையைத் தொட்டு ஆறுதல் கூற.. போபாலில் ஒரு உருக்கமான சந்திப்பு
பிரக்யா சிங் தாக்கூரை அணைத்து உமாபாரதி ஆறுதல் சொன்னார்.
போபால்: மத்திய அமைச்சர் உமா பாரதியும், சாத்வி பிரக்யா சிங் தாக்கூரும் போபாலில் சந்தித்துக் கொண்டபோது நெகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதார் பிரக்யா. அவருக்கு உமா பாரதி ஆறுதல் கூறினார்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் உமா பாரதி. ஒரு துறவியும் கூட. யோகி ஆதித்யநாத்துக்கு முன்பு பாஜகவில் கோலோச்சியவர். இப்போது மத்திய அமைச்சராக உள்ளார்.
இந்த நிலையில் அவருடைய இடத்துக்கு சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் கொண்டு வரப்பட்டுள்ளதாக சலசலப்பு கிளம்பியுள்ளது. சாத்வி பிரக்யா சிங்கும் ஒரு துறவிதான். மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி பின்னர் சமீபத்தில் விடுவிக்கப்பட்டவர்.

உமாபாரதி
போபால் தொகுதியில் லோக்சபா தேர்தலில் அவரை களம் இறக்கியுள்ளது பாஜக. இதுதான் சர்ச்சையாகி விட்டது. போபாலில் அவர் நிறுத்தப்பட்டுள்ளதால் இவர் உமா பாரதிக்கு போட்டியாக களம் இறக்கப்படுவதாக பேச்சு கிளம்பி விட்டது.

கண்ணீர்
இந்த நிலையில் இன்று போபாலில் உமா பாரதியும், பிரக்யாவும் சந்தித்துக் கொண்டனர். காருக்குள் பிரக்யா அமர்ந்திருக்கிறார். உமா பாரதி வெளியில் நிற்கிறார். அப்போது பிரக்யா கண்ணீர் வடிய காட்சி தருகிறார்.
|
வணக்கம்
பிரக்யாவின் அழுகை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருக்கிறது. அவருக்கு உமா பாரதி ஆறுதல் கூறுகிறார். தலையைத் தடவிக் கொடுக்கிறார். பின்னர் குனிந்து வணக்கம் சொல்லி பிரக்யாவின் கைகளையும் பிடித்துக் கும்பிடுகிறார்.

கைக்குட்டை
அப்படியும் பிரக்யாவின் அழுகை போகவில்லை. இதையடுத்து குடிக்க தண்ணீர் கொடுக்குமாறு கூறுகிறார். பிரக்யாவும் தண்ணீர் வாங்கிக் குடிக்கிறார். கைக்குட்டையால் கண்களையும் துடைத்துக் கொள்கிறார்.

கலகலப்பு
அதைப் பார்த்து வெளியில் நிற்கும் கட்சிக்காரர் ஒருவர் ஜாலியாக ஏதோ கருத்தை தெரிவிக்கிறார். இதையடுத்து அவரைப் பார்த்து கையால் குத்துவது போல பாவனை செய்கிறார் உமா பாரதி. அந்த இடமே கலகலப்பாகி விடுகிறது.
ஒற்றுமையாக இருந்தால் சரித்தான்!
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications