மேம்பாலத்தில் கள்ளக்காதலனுடன் மனைவி.. காதலர் தினத்தில் கணவன் கண்ட காட்சி.. மறுநொடி பெரிய ட்விஸ்ட்
கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில், காதலர் தினத்தன்று ஒரு பரபரப்பான சம்பவம் அரங்கேறி உள்ளது.. கடந்த 2 நாட்களாகவே இந்த சம்பவத்தான் சோஷியல் மீடியாவிலும் வைரலாகி கொண்டிருக்கிறது.. இது தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள் என்றாலும், அன்றைய தினம் நடந்த பரபரப்பு மட்டும் இன்னும் குறையவில்லை...
பிப்ரவரி 14-ம் தேதி உலகம் முழுவதும் அன்பை பரிமாறிக்கொள்ளும் தினமாக இது கொண்டாடப்படுகிறது.. அந்தவகையில் நேற்று முன்தினம் காதலர் தினத்தன்றும் காதலர்கள் மகிழ்ச்சி பெருக்கில் காணப்பட்டனர்..

அப்படித்தான் உத்தரபிரதேசத்தில் ஒரு ஜோடி உச்சக்கட்ட மகிழ்ச்சியில் காணப்பட்டது.. ஆனால் இது காதல் ஜோடி இல்லை, கள்ளக்காதல் ஜோடி..
உத்தரபிரதேசம் கணவர்
உத்தரபிரதேசத்தின் ஹம்பூர் மாவட்டம் மீரட்டை சேர்ந்த இளைஞருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது... ஆனால் அந்த மனைவிக்கோ, அதே பகுதியை சேர்ந்த மற்றொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
காதலர் தினமான நேற்று முன்தினம் அந்த மனைவி, தனது கள்ளக்காதலனுடன் பைக்கில் சென்றுள்ளார். மீரட் மேம்பாலத்தில் இருவரும் பைக்கில் சென்றபோது, பெண்ணின் கணவர் பார்த்துவிட்டடார்.
ஏற்கனவே தன்னுடைய மனைவி, வேறொரு நபருடன் உறவில் இருப்பதாகவும், அவருடன் ஊரை சுற்றி வருவதாகவும் அரசல் புரசலாக கணவருக்கு தெரிந்துள்ளது.. ஆனால் அதை பெரிதாக நம்பாத நிலையில், காதலர் தினத்தன்று தனது மனைவி தன்னை ஏமாற்றிவிட்டு மற்றொருவருடன் இருப்பதை நேரில் பார்த்த அந்த கணவன், கடும் ஆத்திரமடைந்தார்..
கள்ளக்காதல் ஜோடி
மேம்பாலத்தில் வந்துகொண்டிருந்த ஜோடியை வழிமறித்தார். மேம்பாலத்தின் நடுவிலேயே கணவனுக்கும், அந்த மனைவியின் காதலனுக்கும் இடையே வாக்குவாதம் தொடங்கியது. ஒருகட்டத்தில் இந்த வார்த்தை போர் முற்றி, இருவருக்கும் இடையே பயங்கரமான கைகலப்பு ஏற்பட்டது.
கணவனும், அந்த கள்ளக்காதலனும் ஒருவரை ஒருவர் பொது இடமென்றும் பாராமல் சரமாரியாகத் தாக்கிக்கொண்டனர். அங்கிருந்த பொதுமக்கள் இந்தத் திடீர் மோதலைக் கண்டு அதிர்ச்சியடைந்து வேடிக்கை பார்க்க குவிந்துவிட்டனர். சிலர் இச்சம்பவத்தைத் தங்கள் செல்போன்களில் வீடியோவாகப் பதிவு செய்தனர்.
மேம்பாலத்தில் மல்லுக்கட்டிய நபர்
அந்த பெண்ணோ, தனது கணவனை எப்படியாவது சமாதானப்படுத்த முயன்றார், ஆனால் ஆத்திரம் அடங்காத கணவன், கள்ளக்காதரனை தாக்குவதிலேயே குறியாக இருந்தார்.
நடுரோட்டில் நடந்த இந்த மல்லுக்கட்டினால் அந்தப் பகுதியில் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டது. தகவலறிந்த உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோதலில் ஈடுபட்டவர்களைக் கட்டுப்படுத்தினார்கள்.. பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்டது மற்றும் சட்டம் ஒழுங்குக்குக் குந்தகம் விளைவித்தது தொடர்பாகப் போலீஸார் விரிவான விசாரணையை மேற்கொண்டுள்ளனர்..
2 பேரும் ஆஸ்பத்திரியில்
அந்த நபர் தனது மனைவியின் மீது கொண்ட சந்தேகத்தால் நீண்ட நாட்களாகக் கண்காணித்து வந்தாரா அல்லது காதலர் தினத்தன்று தற்செயலாகப் பார்த்தாரா என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலர் தினத்தன்று அன்பைப் பரிமாறிக்கொள்ளும் செய்திகளுக்கு மத்தியில், துரோகம் மற்றும் வன்முறை கலந்த இந்தச் சம்பவம் ஹாப்பூர் பகுதியில் ஒரு பரபரப்பான சூழலை உருவாக்கி விட்டது..
ஆனால், மேம்பாலத்தில் அடித்து கொண்ட 2 நபர்களும் அதிகளவில் ரத்தக்காயம் அடைந்துவிட்டார்களாம்.. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவருடன், சம்பந்தப்பட்ட நபர்களிடம் போலீஸார் வாக்குமூலம் பெற்று மேற்கொண்டு சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்களாம்..!!












Click it and Unblock the Notifications