அடேங்கப்பா.. பாலய்யாவையே மிஞ்சும் பயங்கர ஹீரோவா இருந்திருக்கிறாரே ராம் ரஹீம்!

சூப்பர் ஹீரோக்களை மிஞ்சும் அளவிற்கு சும்மா பறந்து பறந்து அடிக்கிறார் ராம் ரஹீம்.

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: தெலுங்குப் படங்களைத் தூக்கிச் சாப்பிடும் வகையிலான படங்களில் நடித்து அசத்தியவர்தான் இப்போது பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி சிறைக்குப் போயுள்ள குல்தீப் ராம் ரஹீம். உண்மையில் சூப்பர் ஹீரோவாக நடித்தவர் இன்று சிறையில் கம்பி எண்ணப் போகிறார்.

தெலுங்கில் என்.டிஆர். பாலகிருஷ்ணா படங்களில் நம்பவே முடியாத காட்சியெல்லாம் வரும். அதேபோன்ற படங்களில் நடித்து பஞ்சாப், ஹரியானாவைக் கலக்கியவர் ராம் ரஹீம். பின்னர் அப்படியே மதவாதியாக மாறி இன்று இரு மாநிலங்களையும் அதகளப்படுத்தி வருகிறார்.

Unbelievable movie contribution of Ram Rahim

தேரா சச்சா அமைப்பின் நிறுவனரான ராம் ரஹீம், நடித்த படங்களைப் பார்த்தால் படு வேடிக்கையாக இருக்கிறது. பாலகிருஷ்ணா படங்களின் ரீமேக்கில் நடிக்க முழுத் தகுதியும் இவருக்கு உண்டு என்று கூட சொல்லலாம்.

இவர் நடித்தது 5 சினிமாப் படங்கள்தான். ஆனால் அதிலேயே தனது ரசிகர்களை அதிர வைத்திருந்தார் இந்த சேட்டை சாமியார். எல்லாமே கலகல ரக படங்கள்தான். இவரது படங்களைப் பார்த்தாலே பரவசமாகி விடும்.

தெலுங்கு சினிமா நடிகர்கள் மாதிரி நம்பவே முடியாத ஆக்ஷன் சீன்கள், நடனம், காட்சிகள் என இவரது படங்கள் பயமுறுத்தலாக இருக்கும். இந்தப் படங்கள் மூலமாக தனது ஆதரவாளர்களை குஷிப்படுத்திக் கொண்டிருந்தார் ராம் ரஹீம்.

இவர் கடைசியாக நடித்த படம் ஜட்டு என்ஜீனியர். இந்தப் படத்தை இவரது வளர்ப்பு மகள் ஹனிப்ரீத் இன்சான்தான் இயக்கியிருந்தார். படம் சகிக்க முடியாது. ஆனால் ஆதரவாளர்களை இது வெகுவாக கவர்ந்தது.

இந்த சாமியாருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் தவிர ஹனிபிரீத்தையும் தத்தெடுத்துள்ளார். பெற்ற மகள்களை விட ஹனிதான், சாமியாருக்கு ரொம்ப நெருக்கமாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+