சினிமா பிரிவியூ பார்த்துவிட்டு தற்கொலை செய்த மலையாள நடிகர் அஜய் கிருஷ்ணன்
திருவனந்தபுரம்: நான்கு கோடி ரூபாய் செலவு செய்து தயாரித்த படத்தின் பிரிவியூவை பார்த்துவிட்டு மலையாள நடிகரும் படத் தயாரிப்பாளரான அஜய் கிருஷ்ணன் தற்கொலை செய்துக்கொண்டது திரையுலைகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கேரள மாநிலம், கொல்லம் மனையில்குளங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் அஜய் கிருஷ்ணன்(28). இவர் மலையாளத்தில் பிருத்விராஜ் நடித்த மெம்மரீஸ், ‘சீன் 1 நம்முடைய வீடு' உள்பட சில மலையாள படங்களிலும், டிவி சீரியலிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர், பிரபல நடிகர் ஆஸிப் அலியை கதாநாயகனாக வைத்து ‘அவருடே ராவுகள்' என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்து வந்தார். அஜய் தயாரித்த முதல் படம் இதுவாகும். இந்த படத்தில் ஆசிப் அலி, உன்னி முகுந்தன், வர்கீஸ், வினய், ஹனி ரோஸ், லீனா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து விட்டன.

அடுத்தமாதம் படத்தை வெளியிட அஜய் கிருஷ்ணன் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் இவர் 23ம்தேதி இரவு, எர்ணாகுளத்தில் இருந்து கொல்லத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். பின்னர் வீட்டின் முதல்மாடி அறையில் தங்கியிருந்தார்.
சனிக்கிழமையன்று மாலை வரை அறை திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை திறந்து பார்த்தனர். அப்போது அஜய் கிருஷ்ணன் தூக்குப்போட்டு பிணமாக தொங்கியது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இவர் தற்கொலைக்குக் காரணம் இவர் தயாரித்த படம்தான் என்று கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன் ‘அவருடே ராவுகள்' படத்தின் பிரிவியூ ஷோ திரையிடப்பட்டுள்ளது. படம் தயாரிப்பாளர் அஜய்க்கு திருப்தி அளிக்கவில்லை. ரூ.4 கோடி செலவு செய்து தான் தயாரித்த படம் வர்த்தக ரீதியாக வெற்றி அடையாதோ என்று அச்சமடைந்த அஜய், இரண்டு நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில் சனிக்கிழமையன்று அஜய் தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். தங்களது ஒரே மகனை பறிக்கொடுத்த அஜய்யின் பெற்றொர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
தான் தயாரித்த மலையாளப் படத்தை வெற்றி பெறாது என்று தயாரிப்பாளர் தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் மலையாள திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications