For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம்: பாஜக தேர்தல் அறிக்கை

By Mathi
|

டெல்லி: பொதுசிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தினால்தான் பாலின சமத்துவத்தை உருவாக்க முடியும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. அதில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம், சேதுக்கால்வாய் திட்டம் குறித்து முடிவெடுக்கும் போது அப்பகுதி கலாசார பாரம்பரியத்தின் ஒரு பகுதி, தோரியப் படிமம் அதிகம் கொண்ட கேந்திர முக்கியத்துவம் ஆகியவை கருத்தில் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Uniform Civil Code in BJP manifesto

மேலும் சர்ச்சைக்குரிய பொதுசிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்றும் பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாஜகவின் தேர்தல் அறிக்கையில், அரசியல் சாசனத்தின் 44வது பிரிவில் பொதுசிவில் சட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இத்தகைய பொதுசிவில் சட்டத்தை ஏற்றுக் கொண்டால்தான் இந்தியா போன்ற நாட்டில் பாலின சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டும். இந்த பொதுசிவில் சட்டம் அனைத்து பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The BJP in its Election Manifesto 2014 has promised to draft a Uniform Civil Code, which has been a contentious issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X