பொது சிவில் சட்டம்.. உத்தரகாண்டில் விரைவில் அமல்படுத்துவோம்.. ஆளும் பாஜக அரசு அறிவிப்பு
டேராடூன்: எங்கள் மாநிலத்தில் விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார். உத்தரகாண்டில் பாஜக ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியா பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள் கொண்ட பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடாகும். இந்தியாவில் கிரிமினல் சட்டங்கள் ஒரே மாதிரியாக உள்ளன. ஆனால், சிவில் விவகாரங்களில் அப்படி இல்லை. சிவில் சட்டங்கள் என்பது மதங்களைப் பொறுத்து மாறுகிறது. இந்த நிலையை மாற்றி நாடு முழுக்க ஒரே பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்பது பாஜகவின் திட்டங்களில் ஒன்றாகும்.

2024 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கும் இந்த சூழலில் நாட்டில் பொது சிவில் சட்ட விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. பிரதமர் மோடியே அண்மையில் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக பேசினார். இரண்டு வகையான சட்டங்களை கொண்டு நாட்டை நடத்த முடியாது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அனைவரும் சமம் என்றும் குறிப்பிட்டனர்.
எனவே, நாடு முழுக்க ஒரே பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பேசியிருந்தார். பொது சிவில் சட்டத்தை அப்பட்டமாக ஆதரித்து பேசிய பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன. மத்தியில் ஆளும் பாஜக இந்த விவகாரத்தை தற்போது கையில் எடுத்து இருப்பதால் தற்போது பொது சிவில் சட்டம் குறித்த விவாதம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் உத்தரகாண்டில் விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். பொது சிவில் சட்டம் தொடர்பாக அமைக்கப்பட குழுவானது வரைவு அறிக்கையை தயார் செய்து இருப்பதாக இன்று கூறியிருந்த நிலையில் புஷ்கர் தாமி சிங் தனது ட்விட்டரில் பொது சிவில் சட்டம் குறித்து பதிவிட்டு இருக்கிறார்.
புஷ்கர் சிங் தாமி கூறுகையில், " நாங்கள் மக்கள் அளித்த வாக்குறுதிகளின் படி இன்று பொது சிவில் சட்டம் குறித்து வரைவு ஒன்றை தயாரிக்க அமைக்கப்பட்ட குழு அறிக்கையை சமர்பித்துள்ளது. விரைவில் தேவ்பூமியான உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்" என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications