மத்திய பட்ஜெட் 2016
-லோக்சபாவில் பட்ஜெட் நிறைவேற்றப்பட்டது
-கார்கள் விலை உயருகிறது - டீசல் கார்களுக்கு 2.5%; சொகுசு கார்களுக்கு 4% வரி உயர்வு
-சிறிய கார்கள் மீது 1% அடிப்படை கட்டமைப்பு செஸ் வரி
-டீசல் கார்கள் மீது கூடுதலாக 2.5% அடிப்படை கட்டமைப்பு செஸ் வரி
-நிலக்கரி மீதான பசுமை எரிசக்தி வரி டன்னுக்கு ரூ200-ல் இருந்து ரூ400 ஆக உயர்வு
-வரி ஏய்ப்பில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- ஜேட்லி
-பீடி தவிர்த்த பிற புகையிழை பொருட்கள் மீது 10 முதல் 15% கூடுதல் வரி. சிகரெட் விலை உயரும்
-ரூ. 10 லட்சத்துக்கு அதிகமான விலை கொண்ட கார்கள் மீது 1% கூடுதல் வரி
-ஆண்டுக்கு ரூ1 கோடி ரூபாய்க்கு மேல் வருமான உள்ளவர்களுக்கு கூடுதல் வரி

-ஆண்டுக்கு ரூ1 கோடி ரூபாய்க்கு மேல் வருமான உள்ளவர்களுக்கான வரி 12%ல் இருந்து 15% ஆக உயர்வு
-பட்ஜெட் தாக்கலின் போது உயர்ந்த பங்கு சந்தை தற்போது 565 புள்ளிகள் வீழ்ச்சி
-35 லட்சம் ரூபாய்க்குட்பட்ட வீட்டுக் கடன் வட்டிக்கு ரூ 50 ஆயிரம் கூடுதல் வரிச்சலுகை
-மேக் இன் இந்தியா திட்டத்துக்கு ஊக்கம் தரும் வகையில் சுங்கம், கலால்வரியில் மாற்றம்
-பட்ஜெட்டில் வருமான வரி விகிதங்களில் பெரிய மாற்றங்கள் இல்லை- ஜேட்லி
-வருமான வரி சலுகையால் ரூ5 லட்சத்துக்கும் குறைவான ஊதியம் பெறும் 1 கோடி பேர் பயனடைவர்
-வணிக நிறுவனங்களுக்கான வரி 29% ஆக குறைக்கப்படும்
-வாடகை வீட்டில் வசிக்கும் வருமான வரிதாரருக்கு ரூ60,000 வரை வரிச்சலுகை
-வாடகை வீட்டில் வசிப்போருக்கு இதுவரை சலுகை ரூ. 24,000 ஆக இருந்தது
-ஆண்டுக்கு ரூ5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ளோருக்கு ஆண்டுக்கு ரூ3,000 வரிசலுகை
-நடப்பு நிதியாண்டில்நிதிப்பற்றாக்குறை 3.9% ஆக இருக்கும்
-உணவு பொருளை சந்தைப்படுத்த 100% அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி
-நேரடி உர மானிய திட்டம் சோதனை அடிப்படையில் சில மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்
-தொழில் தொடங்குவதை எளிமையாக்க கம்பெனிகள் சட்டம் திருத்தப்படும்
-டயாலிசிஸ் இயந்திரங்களுக்கான உற்பத்தி வரி நீக்கம்
-7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை பரிசீலிக்க குழு அமைப்பு
-ஆதார் எண் அடிப்படையில் பல்வேறு திட்ட மானியங்கள் வழங்கப்படும்
-பருப்பு விலை உயர்வைக் கட்டுப்படுத்த ரூ900 கோடி ஒதுக்கீடு
-விவசாயிகளுக்கான உரமானியம் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்
-2.5 கோடி சிறுதொழில் முனைவோருக்கு முத்ரா திட்டத்தின் கீழ் கடனுதவி
-முத்ரா திட்டத்துக்கான நிதி ரூ1,80,000 கோடியாக உயர்வு
-பொதுத்துறை வங்கிகளுக்கு மறுமுதலீட்டுக்கு ரூ25,000 கோடி ஒதுக்கீடு
-மாநில அரசுகளுடன் இணைந்து 160 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்
-பங்குவிலக்கல் துறையின் பெயர் முதலீடு மற்றும் பொதுச்சொத்து நிர்வாக துறையாக மாற்றப்படும்
-நாளொன்றுக்கு 100கி.மீ. சாலைகள் அமைப்பதுதான் இலக்கு
-2.23 லட்சம் கி.மீ. முக்கிய சாலைகள் இணைக்கப்படும்
-டயாலிஸிஸ் கருவிகள் இறக்குமதிக்கு சுங்க வரி விலக்கு
-அணுமின் திட்டங்களுக்கு ரூ3,000 கோடி ஒதுக்கீடு
-கடலுக்கு அடியில் "எரிவாயு" உற்பத்திக்கு மானியம் வழங்குவதற்கு ஆலோசனை
-எஸ்சிஎஸ்டி தொழில்முனைவோருக்கான தேசிய மையம் அமைக்கப்படும்
-ஷாப்பிங் மால்களைப் போல சிறுகடைகளும் வாரம் முழுவதும் செயல்பட அனுமதிக்கப்படும்
-உள்கட்டமைப்பு துறைக்கு ரூ2.21 லட்சம் கோடி நிதிஒதுக்கீடு
-50,000 கி.மீ மாநில நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்படும்
-2016-ம் ஆண்டுக்குள் 10,000 கி.மீ தேசிய நெடுஞ்சாலை பணிகள் கட்டி முடிக்கப்படும்
-சாலை, நெடுஞ்சாலை திட்டங்களுக்கு ரூ55,000 கோடி ஒதுக்கீடு
-உயர்கல்விக்காக ரூ1,000 கோடியில் நிதியம் அமைக்கப்படும்
-சிறுதொழில்முனைவோர் துறைக்கு ரூ5,000 கோடி ஒதுக்கீடு
-எழுந்திடு இந்தியா திட்டத்துக்கு ரூ500 கோடி நிதி ஒதுக்கீடு
-2016-17-ல் ரூ9 லட்சம் கோடி விவசாய கடன் தர இலக்கு நிர்ணயம்
-62 புதிய நவோதயா பள்ளிகள் திறக்கப்படும்
-அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் குறைந்தசெலவில் டயாலிஸ் சேவை
-முதியோருக்கு ரூ1 லட்சம் வரை மருத்துவ காப்பீட்டு திட்டம்
-75 லட்சம் நடுத்தர வர்க்கத்தினர் சமையல்எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர்
-கிராமப்புறங்களில் கணிணிவழி கல்வி அறிமுகம்
-வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்ப தலைவிகளின் பெயரில் இலவச சமையல் எரிவாயு
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications