வக்பு சட்டம்: மேற்கு வங்க வன்முறைக்கு வங்கதேசம் தான் காரணம்! உள்துறை அமைச்சகம் பகீர்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் முஷிதாபாத்தில் வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டம் வன்முறையானது. இந்த வன்முறையின் பின்னணியில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் உள்ளதாக மத்திய அரசு பகீர் தகவலை தெரிவித்துள்ளது.

மத்திய அரசு வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற இரு சபைகளிலும் நிறைவேற்றியது. இதற்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து நாடு முழுவதும் வக்ஃபு சட்ட திருத்தம் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் இஸ்லமியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Waqf act west bengal bangladesh

கடந்த வெள்ளிக்கிழமை மேற்கு வங்கத்தில் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை மதிய தொழுகையை முடித்த இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. தந்தை - மகன் உள்பட 3 பேர் இறந்தனர். ஏராளமானவர்கள் காயமடைந்தனர். வாகனங்களுக்கு தீவைத்து எரிக்கப்பட்டது. பெரும் பதற்றத்தால் போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தான் வன்முறை தொடர்பான விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வன்முறைக்கு முக்கிய காரணம் வங்கதேசமாகும். மேற்குவங்க மாநிலம் வங்கதேசத்தின் எல்லையில் உள்ளது. இதனால் வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலத்துக்குள் நுழைந்தவர்கள் தான் வன்முறையை நிகழ்த்தி உள்ளனர். வங்கதேசத்தில் இருந்து முர்ஷிதாபாத் மற்றுமு் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ஊடுருவல்காரர்கள் நுழைந்துள்ளனர்.

இந்த ஊடுருவல்களை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகமான வக்ஃபு சொத்துகள் என்பது உத்தர பிரதேச மாநிலத்தில் தான் உள்ளது. மொத்தம் அங்கு 2.2 லட்சம் வக்ஃபு சொத்துகள் உள்ளன. இதற்கு அடுத்தப்படியாக 2வது இடத்தில் மேற்கு வங்க மாநிலம் உள்ளது. அங்கு மொத்தம் 80,840 வக்ஃபு சொத்துகள் உள்ளன. ஏராளமான இஸ்லாமியர்கள் மேற்கு வங்க மாநிலத்தில் வசித்து வருகின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நம் நாட்டின் உளவுத்துறை சார்பில் இந்த வன்முறை தொடர்பாக முக்கிய விஷயம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதாவது 2019 சிஏஏ எதிர்ப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தை போல் இந்த போராட்டத்தை தீவிரப்படுத்த வங்கதேசத்தின் பயங்கரவாத அமைப்பு சதித்திட்டம் தீட்டி உள்ளதாக எச்சரிக்கை செய்தது.

அதாவது நம் நாட்டில் ‛ஜமாத் உல் முஜாகிதீன் வங்கதேசம்' என்ற பயங்கரவாத அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சேர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. மதராசா உள்பட சில இடங்களில் மேற்கு வங்கத்தில் பயிற்சிகளை கொடுத்து வருவதாகவும், சிஏஏவை போல் வக்ஃபு சட்டத்தை வைத்த அவர்கள் வன்முறைக்கு திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+