சாலை விபத்தில் சிக்கிய மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மரணம்!!
டெல்லி: சாலை விபத்தில் சிக்கிய மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான கோபிநாத் முண்டே சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான கோபிநாத் முண்டே, மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். டெல்லி விமான நிலையம் அருகே இன்று காலை அவர் சென்ற கார் விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயமடைந்த கோபிநாத் முண்டே மிகவும் ஆபத்தான நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
அப்போது திடீரென கோபிநாத் முண்டேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இருப்பினும் மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்க போராடினர். ஆனால் சிகிச்சை பலனின்றி கோபிநாத் முண்டே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உறுதிப்படுத்தினார்.
கோபிநாத் முண்டே உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு நாளை அடக்கப்படும் என்று மத்திய அமைச்சரான நிதின் கட்காரி கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications