மேனகா காந்திக்கு திடீர் மூச்சுத்திணறல் - மருத்துவமனையில் அனுமதி
Subscribe to Oneindia Tamil
பிலிபிட், உ.பி.: மத்திய மகளிர் மற்றும் சிறார் நலத்துறை அமைச்சர் மேனகா காந்திக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் சொந்தத் தொகுதி உ.பி மாநிலத்தில் உள்ள பிலிபிட். இன்று தனது தொகுதிக்கு வந்துள்ளார் மேனகா காந்தி. அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டார். உடனடியாக அவரை பிலிபிட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 60 வயதாகும் மேனகா காந்திக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications