"மருத்துவர்கள் அல்ல நக்சல்பாரிகள்....." நிகழ்ச்சிக்கு வராததால் மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆவேசம்!
மருத்துவர்களை மத்திய இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹீர் நக்சல்பாரிகள் என விமர்சனம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மஹாராஷ்டிரா: மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் மருத்துவர்களை நக்சல்பாரிகள் என்றும், நக்சல் இயக்கத்தில் போய் சேருங்கள் அப்போது தான் உங்களை தோட்டாக்களால் நாங்கள் சுட முடியும் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் பகுதியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவமனையில் ஜென்ரிக் மருந்துகளை வழங்குவதற்காக கவுண்டரை திறந்து வைத்த அவர், விழாவில் மாவட்ட தலைமை மருத்துவர் மற்றும் மருத்துவமனை டீன் ஆகியோர் வராததற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

இது குறித்து கூறிய ஹன்ஸ்ராஜ் அஹீர், நான் ஒரு மத்திய அமைச்சர் என்னுடைய விழாவில் அவர்கள் கலந்துக்கொள்ள மாட்டார்களா. அவர்கள் மருத்துவர்கள் அல்ல, நக்சல்பாரிகள். அவர்கள் எதற்கு இங்கு மருந்துகளை கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் நக்சல் இயக்கத்தில் சேர வேண்டியதானே, அப்போது தான் நாங்கள் அவர்களை எங்கள் தோட்டாக்களால் சுட முடியும் என்றார்.
இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள மாவட்ட தலைமை மருத்துவரும், மருத்துவமனை டீனும் தாங்கள் 10 நாட்கள் விடுமுறையில் உள்ளதாகவும், முறையான அழைப்பு யாருக்கும் கொடுக்கப்படாத நிலையில் எவ்வாறு நிகழ்ச்சி இருப்பதை நாங்கள் அறிந்துக்கொள்ள முடியும் என்றும் கேள்வி எழுப்பினர். இந்த விழாவில் ஆட்சியருக்கும் முறையான அழைப்பு விடுக்கப்படாததால் அவரும் கலந்துக்கொள்ள வில்லை.
பாஜக ஆட்சியில் நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை, சுகாதாரத்துறையில் இந்த ஆட்சி அக்கறை செலுத்துவதில்லை என மருத்துவர்கள் புலம்பிக்கொண்டிருக்கும் நிலையில், மத்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications