மக்கள் விரும்பாவிட்டால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம்: பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி
மக்கள் விரும்பாவிட்டால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
டெல்லி: ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்படும். மக்கள் விரும்பாத திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாது என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்காக விவசாய நிலங்கள் மத்திய அரசு கையகப்படுத்தியுள்ளது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என பொதுமக்கள் நெடுவாசலில் தொடர் முழக்க போராட்டத்தை துவக்கியுள்ளனர்.

இதையடுத்து டெல்லி சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடியை சந்தித்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் டெல்லியில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை இன்று சந்தித்து பேசினார். அப்போது, நெடுவாசல் திட்டம் மற்றும் அதற்கு மக்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து பேசியுள்ளார்.
பின்னர் பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் ஏதேனும் பாதிப்பு வர வாய்ப்பு உள்ளதா? என அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்கப்படும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருக்கிறார். மக்கள் விரும்பாவிட்டால் திட்டத்தை செயல்படுத்த விரும்ப மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications