ஃபேப்இந்தியா கடையின் உடைமாற்றும் அறையில் மறைத்து வைத்திருந்த கேமராவை கண்டுபிடித்த ஸ்மிருதி இரானி
பிரபல ஃபேப்இந்தியா கடையின் உடைமாற்றும் அறையில் மறைத்து வைத்திருந்த கேமராவை கண்டுபிடித்த அமைச்சர் ஸ்மிருதி இரானி
பனாஜி: கோவா சென்ற மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஷாப்பிங் செய்கையில் பிரபல கடை ஒன்றின் உடைமாற்றும் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராவை கண்டுபிடித்தார்.

மத்திய கல்வித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கோவாவில் விடுமுறையை கழிக்க வருகிறார். கோவாவின் வடக்கு பகுதியில் உள்ள கன்டோலிம் நகருக்கு சென்ற அவர் ஷாப்பிங் செய்ய திட்டமிட்டார். இதையடுத்து அவர் அந்த நகரில் உள்ள பிரபல துணிக் கடையான ஃபேப்இந்தியா கடைக்கு சென்றார். அந்த கடையில் ஆடை வாங்கிய அவர் அதை அணிந்து பார்க்க அங்குள்ள உடைமாற்றும் அறைக்கு சென்றார்.
அப்போது அந்த அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராவை அவர் கண்டுபிடித்தார். கேமரா இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அது குறித்து உடனே உள்ளூர் எம்.எல்.ஏ. மைக்கேல் லோபோவுக்கு தகவல் அளித்தார்.
Calangute (Goa): HRD Minister Smriti Irani finds hidden camera at garment store’s trial room pic.twitter.com/z3hyscBnwy
— ANI (@ANI_news) April 3, 2015 உடனே மைக்கேல் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். அவரின் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசார் ஸ்மிருதி இரானியிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் டெல்லியில் பிரபல ஆடைக் கடையின் உடைமாற்றும் அறையில் செல்போனில் வீடியோ ஆன் செய்து வைத்திருந்ததை இளம்பெண் ஒருவர் கண்டுபிடித்தார். இதையடுத்து அந்த அறையில் செல்போனை மறைத்து வைத்த கடையின் மேனேஜர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications