"ரொம்பவே அரிது!" உலகிலேயே 9 பேருக்கு தான் இந்த ரத்த வகை இருக்கு! இப்போது இந்தியாவில் கண்டுபிடிப்பு
காந்திநகர்: குஜராத்தில் ஒருவருக்கு உலகத்திலேயே மிகவும் அரிதான ரத்த வகை உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மனிதர்களுக்கு இருக்கும் ரத்த வகைகளை A, B, O or AB எனப் பிரிப்பார்கள். இந்த வகைகளில் பாசிட்டிவ் மற்றும் நெகடிவ் ரத்த வகைகள் இருக்கும். சிலருக்கு மட்டும் அரிதாகப் பாம்பே ரத்த வகை இருக்கும்.
இது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். ஆனால், இதை விட அரிதான ரத்த வகை ஒன்று இருக்கிறது. இது தான் இந்தியாவில் இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குஜராத்
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 65 வயதான ஒருவருக்கு புதிய ரத்த வகை அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த குறிப்பிட்ட ரத்த வகை அடையாளம் காணப்படுவது இதுவே முதல்முறையாகும். மேலும், உலகில் இந்த தனித்துவமான ரத்த வகை உறுதி செய்யப்படும் 10ஆவது நபர் இவர் என்றும் கூறப்பட்டுள்ளது. A, B, O அல்லது AB ஆகிய ரத்த வகைகள் இல்லாத நபருக்குத் தனித்துவமான ரத்த வகையான EMM உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அரிய வகை
பொதுவாக, மனித உடலில் நான்கு வகையான ரத்த வகைகள் உள்ளன. அவை A, B, O, Rh மற்றும் Duffy போன்ற 42 வகையான அமைப்புகளைக் கொண்டு இருக்கும். இந்த வகைகளில் சேராத EMM வகையில் 375 வகையான ஆன்டிஜென்கள் அதிகமாக இருக்கும். EMM நெகட்டிவ் ரத்தவகையைக் கொண்டவர்கள் ரத்தத்தை யாருக்கும் தானம் செய்யவோ அல்லது யாரிடமிருந்தும் பெறவோ முடியாது என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

10ஆவது நபர்
இதுவரை, உலகில் 9 பேர் மட்டுமே இத்தகைய அரிதான ரத்த வகை கண்டறியப்பட்டு இருந்தது. இந்தச் சூழலில் தான் இப்போது குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவருக்கும் இந்த அரிதான ரத்த வகை உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்த ரத்த வகையைக் கொண்ட 10ஆவது நபர் என்ற பெயரையும் அந்த நபர் பெற்றுள்ளார்.

அறுவை சிகிச்சை
குஜராத் மாநிலத்தில் அந்த முதியவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு இதய அறுவை சிகிச்சைக்கு ரத்தம் தேவைப்பட்டுள்ளது. இருப்பினும், அகமதாபாத்தில் அவரது ரத்த வகையை மருத்துவர்களால் உறுதி செய்ய முடியவில்லை. இதையடுத்து அவரது மாதிரிகள் சூரத்தில் உள்ள ரத்த மையத்திற்கு அனுப்பப்பட்டன.

EMM நெகடிவ்
ரத்தப் பரிசோதனையில் முதியவரின் வகை எந்த வகை ரத்தத்துடன் பொருந்தவில்லை. இதையடுத்து முதியவரின் ரத்த மாதிரிகள் மற்றும் அவரது உறவினர்களின் ரத்த மாதிரிகள் விசாரணைக்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டன. அதைத் தொடர்ந்து, முதியவரின் ரத்த வகை, இந்தியாவின் முதல் மற்றும் உலகின் பத்தாவது அரிதான ரத்த வகையான EMM நெகடிவ் என்று உறுதியாகி உள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications