23 வருஷத்துல இதுதான் முதல் விபத்து.. 'தேஜஸ்' ஜெட் குறித்து வெளியான ஆச்சரியமான தகவல்கள்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று நடந்த தேஜஸ் விமான விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேஜஸ் அறிமுகப்படுத்தப்பட்டு 23 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த முதல் விபத்து இதுதான் என்பதால் விபத்து குறித்த விசாரணை தீவிரமடைந்திருக்கிறது.
நேற்று மதியம் ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பகுதியில் மாணவர் விடுதியில் இருந்த மாணவர்களுக்கு திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டிருக்கிறது. மாணவர்கள் வெளியே வந்து பார்த்தபோது கரும் புகையை எழுப்பியவாறு பெரும் தீ எரிந்துக்கொண்டிருந்திருக்கிறது. அடுத்த ஒரு மணி நேரத்தில் ராணுவம் அந்த பகுதியை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறது.

அதன் பின்னர்தான், அந்த பகுதியில் போர் விமானம் ஒன்று விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது என்பதே உள்ளூர் மக்களுக்கு தெரிய வந்திருக்கிறது. விபத்தில் சிக்கியிருந்தது 'தேஜஸ்' விமானம். இது அனைத்து காலநிலையிலும் இயங்கக் கூடிய 4.5 தலைமுறை நவீன போர் விமானமாகும்.
அதைவிட முக்கியமான விஷயம், தேஜஸ் விமானம் இதற்கு முன்னர் இப்படியான விபத்துகளில் அடிக்கடி சிக்கியது இல்லை. கடைசியாக 2001ம் ஆண்டு இதனை பரிசோதித்து பார்க்கும்போது விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதற்கு பிறகு எந்த விபத்தும் பதிவாகவில்லை. இவ்வளவு சிறப்பு வாய்ந்த விமானம் எப்படி, விபத்தில் சிக்கியது? என ராணுவ அதிகாரிகள் விசாரணை தொடங்கியுள்ளனர்.
மறுபுறம் தேஜஸ் விமானம் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன. லைட் காம்பாட் ஏர்கிராஃப்ட் என அழைக்கப்படும் தேஜஸ் ஒரு சூப்பர் சோனிக் விமானமாகும். ஒலியை விட வேகமாக பறக்கும் திறன் கொண்ட விமானங்களை சூபர்சோனிக் என்று கூறுவார்கள். 1984ம் ஆண்டு இந்த விமானத்தை உருவாக்கும் பணி தொடங்கியது. இந்த ஆண்டுதான் ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சியை (ADA) இந்திய அரசு தொடங்கியது. இதற்கு முன்னர் இருந்த மிக் 21 விமானத்தை தொடர்ந்து இது உருவாக்கப்பட்டது.
இலகு ரகத்தில், துல்லியமாக இலக்கை தாக்கிய அழிக்கும் ஆயுதங்களை ஏந்தி செல்லும் வகையில் தேஜஸ் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த விமானத்தில் ஒற்றை இருக்கை கொண்ட விமானங்கள், இரட்டை இருக்கைகள் கொண்ட விமானங்கள் என இரண்டு வகைகள் இருக்கின்றன. பெரும்பாலும் ஒற்றை இருக்கை கொண்ட விமானங்கள் விமானப்படையினராலும், இரட்டை இருக்கை கொண்ட விமானங்கள் கடற்படையினராலும் இயக்கப்படுகிறது.
இது அளவில் சிறியதாக இருப்பதாலும், வெயிட் குறைவு என்பதாலும் எதிரியுடன் மோதும்போது உடனடியான திருப்பங்களை மேற்கொள்ளவும், பதில் தாக்குதல் கொடுக்கவும் இதனை வேகமாக இயக்க முடியும். கடந்த 2016ம் ஆண்டிலிருந்து இந்த விமானங்கள் நமது விமானப்படையில் இருக்கின்றன. தற்போது நம்மிடம் இருக்கும் மிக் 21 ரக விமானங்களை தேஜஸ் விமானங்களாக அப்கிரேட் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது.
நேற்று நடந்த விமான விபத்தை பொறுத்த அளவில், விமானி முன்கூட்டியே பாராசூட்டை பயன்படுத்தியதால் நல்வாய்ப்பா உயிர் பிழைத்திருக்கிறார். இப்படி பத்திரமாக வெளியேறுவதை 'எஜெக்ட்' என்று சொல்வார்கள். ஆபத்திலிருந்து தப்பி உயிர் பிழைத்தாலும், அந்த வீரர் மீண்டும் போர் விமானத்தை இயக்குவதற்கான வாய்ப்புகள் குறைவாகத்தான் இருக்கும் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications