ஜூலை 8ல் தொடங்கிய "போர்".. சூடு குறையாமல் தகிக்கும் காஷ்மீர் #uriattack
ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கு கடந்த ஜூலை 8ம் தேதி முதலே போர்க்களமாகத்தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் ராணுவம் இன்று மிகப் பெரிய இழப்பைச் சந்தித்துள்ளது.
ஜூலை 8ம் தேதி ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி புர்ஹான் வானியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இது அங்கு பெரும் கலவரத்தை ஏற்படுத்தி விட்டது. தொடர் போராட்டங்கள் வெடித்தன. இந்த போராட்டங்களை ஒடுக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த துப்பாக்கிச் சூடுகளில் இதுவரை 80க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்தான் இன்று உச்சகட்ட தாக்குதல் நடந்தேறியுள்ளது. எல்லையை ஒட்டியுள்ள பாரமுல்லா மாவட்டம், யூரி பகுதியானது, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ளது. அங்குள்ள ராணுவ அலுவலகத்தைத்தான் தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர். இவர்கள் லஷ்கர் இ தொய்பாவைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
நான்கு பேர் சேர்ந்து நடத்திய தாக்குதலில் நமக்கு பேரிழப்பாக போய் விட்டது. 17 ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். புர்ஹான் வானியை சுட்டுக் கொன்றதற்குப் பழி தீர்க்கும் வகையில் இந்தத் தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் முழுவதும் பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications