For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு முஸ்லிம் வேட்பாளரை கூட களமிறக்காமல் முஸ்லிம்கள் வாக்குகளை மொத்தமாக பெற்ற பாஜக! உ.பி. அதிசயம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

லக்னோ: உத்தர பிரதேச தேர்தலில் ஒரு முஸ்லிம் வேட்பாளருக்கு கூட சீட் கொடுக்காவிட்டாலும் முஸ்லிம்கள் ஆதரவோடு பாஜக வெற்றி பெற்றுள்ளது எதிர்க்கட்சிகளை புருவம் உயர்த்த செய்துள்ளது.

பாஜகவின் இந்துத்துவா வாக்குகளை காப்பாற்றிக்கொள்ள உ.பி.தேர்தலின்போது 403 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட பாஜக கூட்டணி முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கவில்லை. ராஜ்நாத்சிங், உமா பாரதி, முக்தர் அப்பாஸ் நக்வி ஆகிய மத்திய அமைச்சர்கள், இதுகுறித்து தங்கள் கவலையை பிரதமரிடமும், பாஜக தலைவர் அமித்ஷாவிடமும் கூறியதாக ஒரு தகவல் உள்ளது.

UP assembly election 2017: The Modi-Shah duo didn't give seat to Muslim

ஆனாலும், மோடி-அமித்ஷா இணை, இந்த யோசனையை நிராகரித்துவிட்டு, முஸ்லிம்களில் ஒருவருக்கும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை. இந்துத்துவா வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்ய வேண்டும் என்பதே திட்டம். ஆனால், உ.பி மக்கள் தொகையில் 19.3 சதவீதம் முஸ்லிம்கள் இருந்தும்கூட, ஒரு சீட்டும் கொடுக்காத பாஜகவுக்கு கணிசமாக வாக்களித்துள்ளனர்.

இவ்வளவு பெரிய வெற்றியை பாஜக பெற முஸ்லிம்கள் வாக்குகள் கிடைக்காமல் முடியாது என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்கிறார்கள் அரசியல் பண்டிதர்கள்.

சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் இந்த விந்தை புரியாமல் தலையை பிய்த்துக்கொண்டுள்ளன. முஸ்லிம்களை வழக்கம்போல கவர்ச்சி வார்த்தைகளை சொல்லி வாக்கு வங்கியாக பயன்படுத்தியதுதான் எதிர்க்கட்சிகளின் தோல்விக்கு காரணம் என்று குறை கூறுகிறார்கள் பாஜகவினர்.

English summary
The Modi-Shah duo played the polarisation card to the hilt and that too blatantly by not fielding a single Muslim candidate in the 403-member UP Assembly.general elections!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X