"பிணத்தை" வைத்து சம்பாதிக்கும் பணப் பேய்கள்.. கோமியம் குடித்து பரபரப்பாக்கிய எம்எல்ஏ ஆவேசம்!
அலோபதி டாக்டர்கள் குறித்து பாஜக எம்எல்ஏ குற்றஞ்சாட்டி உள்ளார்
கான்பூர்: "சில அலோபதி டாக்டர்கள் ஐசியூவில் இறந்த கொரோனா நோயாளிகளை காட்டி, பணம் சம்பாதிக்கிறார்கள்.. செத்து போன சடலங்களை வைத்தும் சம்பாதிக்கும் பண பேய்கள் இவர்கள்.. நாட்டை ஆரோக்கியமான முறையில் கொண்டு செல்ல ஆயுர்வேத மருத்துவமே சிறந்தது என்று பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாபா ராம்தேவ் பாஜகவின் ஆதரவாளர்களில் ஒருவர்.. இவரது யோகாசனங்களாலும், இயற்கையோடு ஒன்றிணைந்துள்ள மருந்துகளாலும் ஏராளமானோர் நன்மை அடைந்துள்ளனர்...
இந்நிலையில், 2 நாளைக்கு முன்பு, பாபா ராம்தேவ் அலோபதி டாக்டர்கள், அலோபதி மருத்துவம் குறித்த பல சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியிருந்தார்..

டாக்டர்கள்
அலோபதி மருத்துவம் ஒரு "முட்டாள்தனமான அறிவியல்" என்றும் ரெம்டெசிவிர் போன்ற மருந்துகளாலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் கூறியிருந்தார்.. உலகம் முழுவதும் பல கோடி மக்களின் உயிர்களை காப்பாற்றும் வேலையில் டாக்டர்கள் ஈடுபட்டு வரும்போது, பாபா ராம்தேவ் கருத்துக்கு கண்டனங்களும் எழுந்தன..

வீடியோ
அத்துடன், அவர் தனது கருத்துக்களை திரும்பப் பெற வேண்டும், இல்லாவிட்டால் வழக்கு தொடுப்போம் என்றும் இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியது. ஆனால், பாபா ராம்தேவ் இன்னொரு வீடியோ போட்டு அதிர்ச்சி கிளப்பினார்.. அந்த வீடியோவில் "அவங்க அப்பனால் கூட என்னைக் கைது செய்ய முடியாது.. அவர்கள் ஏன் சும்மா கத்திக்கொண்டு இருக்கிறார்கள்" என்றார்.

வீடியோ
அந்த பரபரப்பே முடிவடையாத நிலையில், உபியின் பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங்கும் அதேபோல ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்... பைரியா தொகுதி எம்எல்ஏதான் இந்த சுரேந்திர சிங். சில நாட்களுக்கு முன்புகூட, இவர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், திடீரென மாட்டு கோமியத்தை எடுத்து குடித்துவிட்டார்.. பிறகு பேசும்போது, இந்த கோமியத்தின் மூலம் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும்..

குளிர்ந்த நீர்
நான் இன்னைக்கு 18 மணி நேரமும் சுறுசுறுப்பா வேலை செய்யவும், எப்பவுமே ஆரோக்கியமா இருக்கவும் காரணமே இந்த கோமியம்தான். ஆனால், இதை காலை நேரத்தில் வெறும் வயிற்றில்தான் குடிக்க வேண்டும்.. அதாவது 2 அல்லது 3 மூடி கோமியத்தை கொஞ்சம் குளிர்ந்த நீரில் கலந்து குடிக்க வேண்டும்.. இதை குடித்தபிறகு அரை மணி நேரத்தக்கு எதுவுமே சாப்பிடக்கூடாது என்று கூறியிருந்தார். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானது..

சடலங்கள்
இப்படிப்பட்ட சூழலில், அலோபதி டாக்டர்கள் சிலர் மீது சுரேந்திரா குற்றஞ்சாட்டி உள்ளார்.. சில அலோபதி டாக்டர்கள் ஐசியுவில் இறந்த நோயாளிகளை காட்டி, பணம் சம்பாதிக்கிறார்கள்.. செத்து போன சடலங்களை வைத்தும் சம்பாதிக்கும் பண பேய்கள் இவர்கள்.. நான் அலோபதி மருத்துவம் மோசமானது என்று சொல்லவில்லை.. ஆனால், அதில் உள்ள நல்லவைகளை யாரும் சரியாக பயன்படுத்தவில்லை..

யோகா
அதேநேரம் எத்தனையோ அலோபதி டாக்டர்கள் நேர்மையாக வேலை பார்த்து வருவதையும் வரவேற்கிறேன்.. பாராட்டுகிறேன்.. எனினும், ஆயுர்வேத மருத்துவ முறையே சிறந்தது.. ஆரோக்கியமாக நம் நாட்டை மாற்றும் திறன் படைத்தது.. அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, யோகாவையும் ஆயுர்வேதத்தையும் ஊக்குவிப்பதே என்னுடைய வாழ்க்கையின் லட்சியம்.. என்று கூறியுள்ளார். இந்த கருத்து மறுபடியும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.
-
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன் -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications