துப்பாக்கிமுனையில் பெண்ணை ஆட வைத்து, பணத்தை வீசி கான்ஸ்டபிள் அட்டூழியம்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் குடிபோதையில் கலை நிகழ்சசி நடந்த மேடையில் ஏறி பெண் டான்ஸரை துப்பாக்கி முனையில் ஆட வைத்ததுடன் அவர் மீது பணத்தை வீசியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாஜஹான்பூரில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெண் டான்ஸர் ஒருவர் மேடையில் ஆடிக் கொண்டிருந்தார். அப்போது போலீஸ் கான்ஸ்டபிள் சைலேந்திர சுக்லா குடிபோதையில் மேடையில் ஏறி துப்பாக்கி முனையில் அந்த பெண்ணை நடனமாடுமாறு மிரட்டினார். அந்த பெண் ஆடி, ஆடி சோர்வடைந்தும் சுக்லாவின் மிரட்டலுக்கு பயந்து ஆடிக் கொண்டே இருந்தார்.

பின்னர் சுக்லா தான் வைத்திருந்த ரூ.30 ஆயிரம் பணத்தை அந்த டான்ஸரின் மீது மழையாக பொழிந்தார். இந்த சம்பவம் பற்றி காவல் துறை உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சுக்லா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
{ventuno}
மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதால் தான் போலீசாருக்கு துணிச்சல் வந்துள்ளது. துப்பாக்கிமுனையில் பெண்ணை ஆட வைத்த சுக்லா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications