உ.பி.சட்டசபை தேர்தல்.. 73 தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு
உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு 73 தொகுதிகளில் நடைபெறுகிறது.
லக்னோ: உத்தரபிரதேச சட்டசபைக்கு இன்று முதற்கட்ட தேர்தல் நடக்கிறது. 73 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
நாட்டின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் இன்று தொடங்கி வரும் மார்ச் 8 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இங்கு ஆளும் சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் ஒரு அணியாகவும், பா.ஜ.க, பகுஜன் சமாஜ் மற்றும் ராஷ்ட்ரீய லோக்தள் கட்சிகள் தனித் தனியாகவும் களத்தில் போட்டியிடுகின்றன.

முதற்கட்ட தேர்தல் 15 மாவட்டங்களில் உள்ள 73 தொகுதியில் இன்று நடக்கிறது. இதில் முஸ்லீம் வாக்காளர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.
73 தொகுதயில் மொத்தம் 839 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.6 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடக்கிறது. இதற்காக 15 மாவட்டங்களில் 26, 823 வாக்குச்சாவடிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவுக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் பதற்றமான தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசாபர்நகர் பகுதியை சுற்றி உள்ள 887 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமான பூத்களாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் 600 வாக்குச்சாவடிகள் வெப் காமிரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளன. பதற்றமான 887 வாக்குச்சாவடிகளில் மட்டும் 6000 துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications