தலை முக்காடு நழுவியதைக் கவனிக்காமல் சாப்பிட்ட 4 வயது மகளை அடித்தே கொன்ற தந்தை
லக்னோ: சாப்பிடும் போது தலையை மறைக்காததால், 4 வயது மகளை தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாபர் ஹூசைன். இவரது 4 வயது மகள், வெள்ளியன்று மதியம் சாப்பாடு சாப்பிடும் போது தலைக்கு இட்ட முக்காடு நழுவியுள்ளது. இதனைக் கவனிக்காத அச்சிறுமி தனது தாயுடன் அமர்ந்து சாப்பிட்டுள்ளார்.
இதனைக் கண்டு ஆத்திரமடைந்த ஜாபர், அச்சிறுமியை தூக்கி தரையில் அடித்து கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் போலீசிற்கு தெரியாமல் வீட்டிற்குள்ளேயே புதைத்து விடத் திட்டமிட்டுள்ளார் ஜாபர்.
ஆனால், அதற்கு மறுத்த அச்சிறுமியின் தாயார், இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். தான் தடுத்தும் கூட காதில் போட்டுக் கொள்ளாமல் தனது மகளை ஜாபர் அடித்துக் கொன்றதாகவும், தன்னையும் சரமாரியாக அடித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
கொலை செய்யப்பட்ட சிறுமி பர்ஹீனையும் சேர்த்து ஜாபருக்கு நான்கு குழந்தைகள். சமீபகாலமாக ஜாபருக்கு மனநிலை பாதிப்பு இருந்ததாகவும், மத நம்பிக்கைகள் குறித்து அவர் தீவிரம் காட்டி வந்ததாகவும் அக்கம்பக்கத்தார் போலீசில் தெரிவித்துள்ளனர். ஜாபரை தற்போது போலீஸார் கைது செய்துள்ளதாக எஸ்.பி. பி.கே.ஸ்ரீவாத்சவ் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications