உபி தலித் சிறுமிக்கு நடந்த பாலியல் கொடூரம்.. வெறியாட்டம் ஆடிய 5 கொடூரன்கள்
லக்னோ: நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. வீடு, பள்ளி, கல்லூரி, அலுவலகம், பொது இடம் எங்கும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. மேற்கு வங்கம் மாநிலத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தலித் சிறுமிக்கு எதிராக நடைபெற்றுள்ள கூட்டு பாலியல் வன்முறை சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவில் 16 வயது தலித்து சிறுமி பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார். அவரை 5 ஆண்கள் இணைந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து லக்னோ காவல்துறையினர் கூறுகையில், "அந்த சிறுமி நேற்று (சனிக்கிழமை) சந்தைக்கு சென்றுள்ளார். அங்கு தன்னுடைய ஆண் நண்பர் ஒருவரை எதேர்ச்சையாக சந்தித்துள்ளார்.

தலித் சிறுமி
நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்ததால் கார்டனில் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவர்களை சுற்றி வளைத்துள்ளது. எதற்காக இங்கு அமர்ந்துள்ளீர்கள் என்று கேள்வி கேட்டுக் கொண்டே, அவர்கள் சிறுமியின் ஆண் நண்பரை தாக்க தொடங்கியுள்ளனர். தொடர்ந்து அவரை தாக்கி அங்கிருந்து கிளப்பி, விரட்டிச் சென்றுள்ளனர்.
அவர் அங்கிருந்து சென்றதும் அந்த 5 பேர் கொண்ட கும்பல், சிறுமியை தூக்கி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். வீடு திரும்பியவுடன் சிறுமி தன் குடும்பத்தினரிடம் தனக்கு நடந்த கொடுமையை விளக்கியுள்ளார். சிறுமியின் தந்தை மூலம் காவல்துறையில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.
பகீர் பின்னணி
முதல்கட்டமாக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லலித் காஷ்யப் என்கிற 33 வயது இளைஞரும், மிராஜ் என்கிற 23 வயது இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் லலித் காஷ்யப் காவல்துறையினரை தாக்க முயற்சி செய்ததால், தற்காப்புக்காக அவரை சுட்டுள்ளோம். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காஷ்யப் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்த 5 பேரும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவர்கள். காஷ்யப்பிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி, பைக் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளோம். விசாரணையில் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். மற்ற 3 பேரையும் தேடி வருகிறோம்." என்றனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications