உ.பி.: இளம்பெண்ணை கடத்தி 6 மாதங்களாக பலாத்காரம் செய்த தந்தை, 3 மகன்கள்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் 20 வயது பெண்ணை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் 6 மாதங்களாக அடிமையாக வைத்து பலாத்காரம் செய்து வந்தது தெரிய வந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லிசாதி கேட் பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண்ணை லகிபுராவைச் சேர்ந்த நூருத்தீன், அவரது மகன்கள் வாசிம், சாகிம், அனஸ் ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் கடத்தினர். இதையடுத்து வாசிம் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அவரை வீட்டில் பூட்டி வைத்து வாசிம் மற்றும் அவரது சகோதரர்களும், தந்தையும் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வந்தனர்.
6 மாதங்களாக வாசிம், அவரது சகோதரர்கள் மற்றும் தந்தையால் சீரழிக்கப்பட்ட அந்த பெண் நேற்று அந்த வீட்டில் இருந்து தப்பித்தார். நேராக தனது வீட்டிற்கு சென்ற அவர் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி தெரிவித்தார்.
இதையடுத்து அந்த பெண்ணின் தந்தை நேராக காவல் நிலையம் சென்று வாசிம் உள்ளிட்ட 4 பேர் மீது புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த 4 பேரை தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications