என் கனவில் ராகுல் வந்தார்.. மணப்பதாக சொன்னார்.. உ.பி. பெண் கிளப்பும் பீதி!
ராகுல் காந்தி தனது கனவில் வந்ததாகவும், தன்னை மணந்து கொள்வதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அலகாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண்.
லக்னோ: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தனது கனவில் வந்ததாகவும், தன்னை மணந்து கொள்வதாக கூறியதாகவும் அவரை நான் நிச்சயம் மணப்பேன் என்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பெண் தொண்டர் ஒருவர் கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
மேலும் அவர் கூறுகையில் ராகுல் காந்தி நல்லவர், நல்ல தலைவர், அவரைத் திருமணம் செய்து கொண்டால் எனது துயரமெல்லாம் பறந்து போய் விடும் என்றும் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அந்தப் பெண் அளித்த பேட்டி அடங்கிய வீடியோ யூடியூபில் வேகமாக வலம் வந்து கொண்டுள்ளது. அப்பெண் அலகாபாத்தைச் சேர்ந்தவர். பெயர் விவரம் தெரியவில்லை. தன்னை தீவிர ராகுல் ரசிகையாக கூறிக் கொள்ளும் அவர் ராகுலைக் காதலிப்பதாகவும் கூறுகிறார்.
ராகுல் காந்தி தலித் மக்களுடன் அமர்ந்து சாப்பிடுவதும், அவர்களுக்கு உதவுவதும் தன்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருப்பதாகவும், அதேபோல ஒரு தலித் பெண்ணையே அவர் மணக்கலாம். அதேசமயம், நான் "ஓபிசி"யாக இருந்தாலும் கூட என்னை தாராளமாக ராகுல் காந்தி மணக்கலாம். அதற்கு எனக்கு முழுத் தகுதி உள்ளதாக கூறுகிறார் அப்பெண்.
இப்பெண்ணின் கனவில் அடிக்கடி ராகுல் வருவாராம். அப்படி ஒருமுறை வந்தபோது உன்னை மணப்பேன் என்று ராகுல் உறுதியளித்தாராம். இவர் 2014ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தாராம். சேர்ந்தது முதல் ராகுல் மீது பிரியமாக இருக்கிறாராம். அமேதியில் வைத்து பலமுறை ராகுலை சந்தித்துள்ளாராம்.
இவருக்கும், ராகுலுக்கும் ஒரே மாதிரி மன ஓட்டம் இருக்கிறதாம். அதையும் இவரே சொல்கிறார். அவரிடம் பலமுறை நேரில் பேசியுள்ள போதிலும் கூட கனவில்தான் அதிக முறை அவருடன் இருப்பதாக கூறுகிறார் இப்பெண்.
கனவில் வந்த ராகுல் காந்தி தன்னையே மணப்பதாக உறுதியளித்துள்ளதாகவும், திருமணம் செய்து கொண்டு நிறைய குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று உறுதியளித்துள்ளதாகவும் சீரியஸாகவே கூறுகிறார் இப்பெண்!
நீங்களே வீடியோவைப் பாருங்க.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications