பால் உற்பத்தியில் சாதனை படைக்கும் உத்தரப் பிரதேசம்! 190 கிராமங்களை தரம் உயர்த்த பாஜக அரசு முயற்சி

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், பால் உற்பத்தியை பெருக்கவும் 190 கிராமங்களை முன்னோடி பால் உற்பத்தி கிராமங்களாக உருவாக்க அம்மாநில அரசு திட்டமிட்டு வருகிறது.

உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சாரக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று சுமார் 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த 6 ஆண்டுகளில் பாஜக ஏராளமான திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது. இந்நிலையில், தற்போது யோகியின் 6வது ஆண்டை பாஜக சிறப்பாக கொண்டாடி வருகிறது. ஏனெனில் இதற்கு முன்னர் யாரும் உ.பியின் முதலமைச்சராக 6 ஆண்டுகள் வரை நீடித்ததில்லை. அந்த வகையில் யோகி ஆதித்யநாத் சாதனை படைத்திருக்கிறார்.

UP government is planning to develop 190 villages as pioneer milk production villages to increase milk production

இந்த சாதனையை கொண்டாடும் விதமாக பல்வேறு புதிய திட்டங்களை யோகி அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் மற்றொரு புதிய திட்டத்தை அறிவிக்க யோகி அரசு யோசனை செய்து வருகிறது. அதாவது மாநிலத்தில் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், பால் உற்பத்தியை பெருக்கவும் 190 கிராமங்களை முன்னோடி பால் உற்பத்தி கிராமங்களாக உருவாக்க அம்மாநில அரசு யோசனை செய்து வருகிறது. கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தரம்பால் சிங் கூறுகையில்,

"பால் உற்பத்தியில் தேசிய அளவில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் இருக்கிறது. எனவே பால் உற்பத்தியை அதிகரிக்கவும், உ.பியில் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தவும் 20 மாவட்டங்களில் உள்ள 190 கிராமங்களை மாதிரி பால் உற்பத்தி கிராமங்களாக உருவாக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு பால் உற்பத்தி மையமாக மாற்ற அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள பால் உற்பத்திக் குழுக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஊக்கத்தொகைகளும் வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு உரிய நேரத்தில் நிதியுதவி வழங்குவதும் உறுதி செய்யப்படும்.

UP government is planning to develop 190 villages as pioneer milk production villages to increase milk production

பால்பண்ணைத் துறையானது சுயதொழிலை உருவாக்குவதற்கும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் அபரிமிதமான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது. மட்டுமல்லாது மாநிலத்தை ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி உயர்த்துவதிலும் இது முக்கிய பங்களிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஏற்கனவே தெருக்களில் திரியும் பசுக்களை பாதுகாக்க பாஜக அரசு இந்த ஆண்டு ஏராளமான நிதி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் இந்த அரசு மக்களுக்கான, விவசாயிகளுக்கான அரசு என்பது தெளிவாகியுள்ளது" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+